கடற்கரைகள்தான் தமது சிறந்த சிகிச்சையாளர் என்கிறார் அமலா பால். தனது மனக்கவலைகளைப் போக்கி உற்சாகம் அளிப்பது கடற்கரை கள்தான் என்றும் அவர் கூறுகிறார். மாலத்தீவு சென்றுள்ள அவர், அங்கு எடுக்கப்பட்ட கவர்ச்சிப் படங்களை வெளியிட்டுள்ளார்.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு 'சாமானியன்' என்ற படத்தில் நடிக்க உள்ளார் ராமராஜன். ராகேஷ் என்ப வர் இயக்குகிறார். இதில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடிக்க, தமிழ், தெலுங்கு என ஐந்து மொழிகளில் இப்படம் உருவாகிறதாம். தமிழ்த் திரையுலகில் இப்படம் புதுப் பாதையை அமைத்துக்கொடுக்கும் என நம்புகிறாராம் ராமராஜன்.

