சிம்பு: மோசமாக விமர்சிக்காதீர்

3 mins read
4448e5e0-bc9d-4c9c-8971-cba8b787cc2b
-

'வெந்து தணிந்­தது காடு' படத்­தின் வெற்றி நிகழ்வு சென்­னை­யில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு பேசிய சிம்பு, தாம் இது­வரை நடித்­துள்ள படங்­களில் எந்­த­வி­த­மான பிரச்சினை­யும் இல்­லா­மல் வெளி­வந்த படம் இது­தான் என்­றார்.

"இந்­தப் படம் வெளி­யா­கும் முன்பு ரசி­கர்­கள் என்ன முடி­வெ­டுப்­பார்­கள் என்று நினைத்து கவ­லைப்­பட்­டேன். ஆனால் படத்­துக்கு ரசி­கர்கள் அளித்து வரும் ஆத­ர­வைப் பார்க்­கும்­போது மகிழ்ச்­சி­யாக உள்­ளது.

"இப்­ப­டத்தை மக்­க­ளி­டம் கொண்டு சேர்த்த ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு நன்றி. இந்த வெற்றி­யைப் பார்க்­கும்­போது, இது கனவா அல்­லது உண்­மையா எனும் வியப்பு ஏற்­ப­டு­கிறது.

"படம் குறித்த விமர்­ச­னங்­கள்­தான் இந்த வெற்­றிக்­குக் கார­ணம் என நம்­பு­கி­றேன். 80 விழுக்­காட்­டி­னர் நல்­ல­வி­த­மாக விமர்­ச­னம் செய்­துள்­ள­னர்.

"திரை­யு­ல­கில் நம் காலை இட­றி­விட, நம்மைத் தட்­டி­விட நிறைய பேர் உள்­ள­னர். தட்­டிக்­கொடுக்­கத்­தான் அதி­க­மா­னோர் இல்லை. இந்­தப் படத்­தின் இரண்­டாம் பாகம் குறித்து அதி­கம் பேசு­வதற்­கில்லை. எனி­னும் ஜன­ரஞ்­ச­க­மான, ரசி­கர்­கள் குர­லெ­ழுப்பி மகிழ்­வ­தற்­கான சில அம்­சங்­களைச் சேர்த்­தால் நன்­றாக இருக்­கும்," என்ற சிம்பு, ஒரு­வ­ரது தனிப்­பட்ட வாழ்க்­கையை விமர்­ச­னம் செய்­யும் போக்கு மாறவேண்­டும் என்­றார்.

தனி­ம­னித விமர்­ச­னம் மூலம் பிறர் மனதை நோக­டிக்­கக்­கூ­டாது என்று வேண்­டு­கோள் விடுத்த அவர், உரு­வக் கேலி­யை­யும் சாடி­னார்.

உரு­வத்தை அடிப்­ப­டை­யாக வைத்து தம்மைப் பற்­றி­யும் சிலர் விமர்­சித்­துள்­ள­தா­கக் குறிப்­பிட்ட சிம்பு, இது­போன்ற செயல்­கள் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை வெகு­வாகப் பாதிக்­கும் என்­றார்.

"தமி­ழில் ஒரு புது முயற்­சியை மேற்­கொள்­வோமா என்று என்­னி­டம் கேட்­டார் கௌதம் மேனன். அவர் சொன்ன கதை மிக சுவா­ரசி­ய­மாக இருந்­தது. இப்­போது அந்த முயற்­சிக்­குக் கிடைத்­துள்ள வெற்­றி­யைப் பார்க்­கும்­போது சரி­யான முடி­வெ­டுத்­தி­ருப்­ப­தா­கத் தோன்­று­கிறது," என்­றார் சிம்பு.

இந்­நி­கழ்­வில் பேசிய இயக்­கு­நர் கௌதம் மேனன், இப்­ப­டத்­தின் சிறப்­பம்­சங்­களில் ஒன்­றா­கக் கரு­தப்­படும் 'மல்­லிப்பூ' என்ற பாடல் குறித்த ஒரு தக­வ­லைப் பகிர்ந்துகொண்­டார்.

தமிழ் ரசி­கர்­களை வெகு­வா­கக் கவர்ந்­துள்ள அப்­பா­ட­லுக்கு ஏ.ஆர்.ரகு­மான் இசை­ய­மைத்­துள்­ளார்.

இந்­நி­லை­யில், தொடக்­கத்­தில் அந்­தப் பாட­லுக்கு என படத்­தில் இடம் ஒதுக்­கப்­ப­ட­வில்லை என்­றும் கடைசி நேரத்­தில்­தான் அது படத்­தில் சேர்க்­கப்­பட்­டது என்­றும் கௌதம் மேனன் குறிப்­பிட்­டார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்ற பிரமுகர்கள் 'மாநாடு' படத்துக்குப் பிறகு மீண்டும் ஒரு வெற்றிப் படத்தில் சிம்பு நடித்துள்ளதாகப் பாராட்டு தெரிவித்தனர்.

கடந்த 2006ஆம் ஆண்டு 'வல்­ல­வன்' படத்தை இயக்கி இருந்­தார் சிம்பு. அதற்கு ரசி­கர்­கள் மத்­தி­யில் பலத்த வர­வேற்பு கிடைத்தது. அதன்பிறகு கிட்­டத்­தட்ட 16 ஆண்­டு­கள் ஆகி­விட்­டன. ஆனால் சிம்பு தனது இரண்­டா­வது படத்தை இயக்­கிய பாடில்லை.

இந்­நி­லை­யில், ஒரு நடி­க­ராக தமது ஐம்­பதாவது படத்­தில் நடித்து முடித்­த­தும், மீண்­டும் இயக்­கு­நராகப் போவ­தா­கக் கூறி­யுள்­ளார் சிம்பு.

'வெந்து தணிந்­தது காடு' சிம்பு­வின் 47வது படம். அடுத்து ஒபிலி கிருஷ்ணா இயக்­கத்­தில் 'பத்து தல', 'கொரோனா குமார்' ஆகிய படங்­க­ளைக் கைவ­சம் வைத்­துள்­ளார்.

இதை­ய­டுத்து சிம்­பு­வின் ஐம்­ப­தா­வது படத்தை இயக்­குநர் ராம் இயக்க உள்­ள­தா­கத் தகவல்.

இம்­மூன்று படங்­க­ளை­யும் முடித்தபிறகே தமது இரண்­டா­வது படத்தை இயக்க வேண்­டும் என்­ப­து­தான் சிம்­பு­வின் திட்­டம் என்று அவ­ருக்கு நெருக்­க­மா­ன­வர்­கள் கூறு­கின்­ற­னர்.

எனி­னும் சிம்பு சும்மா இருக்­க­வில்லை. தாம் இயக்­கப்­போ­கும் படத்­துக்­கான கதையை உரு­வாக்­கு­வ­தில் முனைப்­பாக உள்­ளார்.

அவர் நிறைய கதை­களை எழுதி வைத்­துள்­ள­தா­க­வும் அவற்­றுள் சிறந்த கதை­யைப் பட­மாக்­கப் போவ­தா­க­வும் பேட்டி ஒன்­றில் அவர் தெரி­வித்­துள்­ளார்.

, :

  

சிம்பு