பிறந்தநாள் ஏற்பாடு: விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி

பிறந்தநாள் ஏற்பாடு: விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி

1 mins read
a4808678-197f-45c4-a5a2-80fa999fdffe
துபாயில் நயன்தாரா, விக்னேஷ் சிவன். -

உல­கின் ஆக உய­ர­மான கட்­ட­டத்­தில் தமது கண­வர் விக்­னேஷ் சிவ­னின் பிறந்­த­நாளைக் கொண்­டாடி உள்­ளார் நயன்­தாரா.

அக்­கட்­டட வளா­கத்­தில் மூன்று பெரிய கேக்­கு­கள் வைக்­கப்­பட்­டி­ருந்­தன. இரு­வ­ருக்­கும் நெருக்­க­மான நண்­பர்­கள் இதில் பங்­கேற்­ற­னர்.

முத­லா­வது கேக்­கில் 'இனிய பிறந்­த­நாள் மகனே' என்­றும் இரண்­டா­வது கேக்­கில் 'இனிய பிறந்­த­நாள் விக்கி சார்' என்­றும் மூன்­றா­வது கேக்­கில் 'இனிய பிறந்­த­நாள் உல­கம்' என்­றும் எழு­தப்­பட்டு இருந்­தது.

இதில் உல­கம் எனக் குறிப்­பிட்ட கேக், நயன்­தா­ரா ­சார்­பில் வைக்­கப்­பட்டு இருந்­தது.

இந்த ஏற்­பா­டு­கள் தம்மை நெகிழ வைத்­த­தா­கச் சொல்­கிறார் விக்­னேஷ் சிவன்.

"அன்­பான மக்­களுடன் ஒரு மறக்க­மு­டி­யாத பிறந்­த­நாள். இதை­வி­டச் சிறப்­பாகக் கொண்­டாட முடி­யாது. இந்த ஆசீர்­வதிக்­கப்­பட்ட வாழ்க்­கை­யில் அவர் (நயன்­தாரா) எனக்­குக் கொடுத்த அனைத்து அழ­கான தரு­ணங்­க­ளுக்­காக எப்­போ­தும் கட­வு­ளுக்கு நன்றி," என்று குறிப்­பிட்­டுள்­ளார் விக்­னேஷ் சிவன்.