நடிகர் அதர்வா சண்டைக் காட்சிகளில் கச்சிதமாக நடிப்பதாகவும் அவருக்கு 'ஜூனியர் கேப்டன்' என்ற பட்டத்தைக் கொடுக்கலாம் என்றும் நடிகர் சின்னி ஜெயந்த் கூறியுள்ளார்.
அதர்வாவின் தந்தையும் மறைந்த நடிகருமான முரளியுடன் 22 படங்களில் நண்பராக நடித்தவர் சின்னி ஜெயந்த்.
இவர் முதன்முதலாக முரளியின் மகன் அதர்வாவுடன் 'ட்ரிகர்' என்ற படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் அதர்வாவை அவர் வெகுவாகப் பாராட்டி உள்ளார்.
"தமிழ் கதாநாயகர்களில் மூன்று பேரின் சண்டைக் காட்சிகள்தான் ரசிக்கும்படி இருக்கும்.
"அதில் ஒருவர் 'கேப்டன்' விஜயகாந்த். அடுத்தது அர்ஜுன். இன்னொருவர் அதர்வா.
"அவருக்கு 'ஜூனியர் கேப்டன்' பட்டத்தைக் கொடுக்கலாம்," என்கிறார் சின்னி ஜெயந்த்.

