ஜோடியாக பங்கேற்ற கௌதம், மஞ்சிமா

ஜோடியாக பங்கேற்ற கௌதம், மஞ்சிமா

1 mins read
Google News Preferred Icon

நடிகர் கௌதம் கார்த்திக்கும் நடிகை மஞ்சிமா மோகனும் காதலிப்பது உறுதியாகி உள்ளதாக கோடம்பாக்க விவரப்புள்ளிகள் கூறுகின்றனர்.

இருவரும் காதலிப்பதை உறுதி செய்யவில்லை.

இந்நிலையில், கெளதம் கார்த்திக்கின் நண்பர் கோபி என்பவரின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் இருவரும் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தி உள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி உள்ளது. இதையடுத்து இருவரும் காதலிப்பது உறுதியாகி உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.