'இயக்குநர்தான் முதல் புள்ளி'

'இயக்குநர்தான் முதல் புள்ளி'

3 mins read
58b1be55-dad6-4800-a370-219bd32f57b2
-
Google News Preferred Icon

'யானை' படத்­தின் வெற்றி தமக்­கான பொறுப்­பு­களை அதி­க­ரித்­துள்­ள­தா­கச் சொல்­கி­றார் அருண் விஜய். அதன்பின்­னர் வெளி­யான 'சினம்' படத்­தில் இவ­ரது நடிப்பு பாராட்­டு­க­ளைப் பெற்­றுத் தந்­துள்­ளது.

இனி கதைத் தேர்­வில் கவ­ன­மாக இருக்க வேண்­டும் என்ற பாடத்தை இவ்­விரு படங்­களும் தமக்கு கற்­றுத் தந்­துள்­ள­தா­கச் சொல்­கி­றார்.

"நல்ல கதை­கள், என்­னு­டைய நடிப்பு என அனைத்­தி­லும் கவ­னம் செலுத்தவேண்­டும் என முடிவு செய்­துள்­ளேன். ஒவ்­வொரு படத்­தி­லும் ரசி­கர்­களை எப்­படி ஆச்­ச­ரி­யப்­ப­டுத்­த­லாம் என்று யோசிப்­பேன்.

"என்­னு­டைய கதை தேர்­வு­கள் எப்­போ­துமே என்னை ரசி­கர்­க­ளு­டன் இணைப்­ப­து­போன்று இருக்­கும். மேலும், இரண்­டரை மணி நேர­மும் திரை­யு­டன் கட்­டிப்­போட்டது போன்று அவர்­கள் உணர வேண்டும். அதற்­கான அம்­சங்­க­ளில்­தான் எப்­போ­தும் கவ­னம் செலுத்தி வரு­கி­றேன்.

"படம் பார்க்­கும் ரசி­கர்­கள் அதில் இருந்து ஏதா­வது ஒரு விஷ­யத்தை தன்­னு­டன் கொண்டு செல்ல வேண்டும் என்­பதே என் ஆசை," என்­கி­றார் அருண் விஜய்.

சினிமா என்­பது குழு­வாக செயல்­பட வேண்­டிய துறை என்று குறிப்­பி­டு­ப­வர், இயக்­கு­நர்­தான் முதல் புள்ளி என்­கி­றார்.

"இயக்­கு­ந­ரின் பார்வை, நடி­கர்­க­ளின் பங்­க­ளிப்பு ஆகிய இரண்­டும் சேரும்­போ­து­தான் ஒரு கதா­பாத்­தி­ரம் முழுமை பெறு­கிறது. எனி­னும் நடி­க­ரை­விட இயக்­கு­ந­ரின் பங்­கும் பொறுப்­பும் மிக முக்­கி­யம்.

"ஏனெ­னில் நடி­கர்­களை மெரு­கேற்­று­வது இயக்­கு­நர் தான். பால­சந்­தர் சார் ரஜி­னியை செதுக்­கி­ய­வர்.

"ஒரு திரைப்­ப­டம் உரு­வா­கும்­போது இயக்­கு­நர்­தான் முதல் புள்ளி. அடுத்து அவ­ருக்­கும் கதா­நா­ய­க­னுக்­கு­மான புரி­தல். இயக்­கு­நர் எதிர்­பார்க்­கும் நடிப்பை வழங்க வேண்­டும் எனில் நான் குறிப்­பி­டும் இந்த சமன்­பாடு முக்­கி­யம்.

"மேலும் ஒரு கதா­பாத்­தி­ரத்தை ரசி­கர்­க­ளி­டம் கொண்டு சேர்ப்­பது இயக்­கு­நர். அருண் விஜய் என்ற மனி­த­னாக ரசி­கர்­களை சென்­ற­டை­வ­தை­விட, ஒரு கதா­பாத்­தி­ர­மாக ரசி­கர்­க­ளைக் கவர்­வது எளிது," என்­கி­றார் அருண் விஜய்.

சம காலத்­தில் நடித்து வரும் மற்ற கதா­நா­ய­கர்களைத் தாம் போட்­டி­யா­கக் கரு­தி­யதே இல்லை என்று குறிப்­பி­டு­ப­வர், தமது முந்­தைய படம்­தான் தமக்­குப்­போட்டி என்­கி­றார்.

"இன்­றுள்ள அனைத்து கதா­நா­ய­கர்­க­ளுமே அவ­ர­வ­ரி­டம் உள்ள தனித் திற­மை­யால் மேலே வந்­த­வர்­கள். மற்­ற­வர்­களை நான் போட்­டி­யா­கக் கரு­தி­ய­தில்லை.

"அதே­ச­ம­யம் மற்ற படங்­களில் உள்ள நல்ல விஷ­யங்­களைக் கவ­னிப்­பேன்," என்று சொல்­லும் அருண் விஜய் நடிப்­பில் அடுத்து வெளி­யா­கும் படம் 'பார்­டர்'.

இது இயக்­கு­நர் அறி­வ­ழ­க­னும் அருண் விஜய்­யும் மீண்­டும் இணைந்­துள்ள படம். முக்­கி­ய­மான காட்­சி­கள் ரசி­கர்­களை வியப்­பில் ஆழ்த்­தும் வகை­யில் இருக்­கு­மாம்.

நாட்­டுப்­பற்றை வலி­யு­றுத்­தும் கதை.

ஒரு படத்­தின் வெற்­றிக்கு விளம்­ப­ரங்­கள் முக்­கிய பங்­க­ளிக்­கும் என்று நம்­பு­கிற நடி­கர்­க­ளின் பட்­டி­ய­லில் அருண் விஜய்க்­கும் இட­முண்டு.

'யானை' பட விளம்­ப­ரத்­துக்­காக இவ­ரும் படக்­கு­ழு­வி­ன­ரும் ஊர், ஊரா­கச்­சென்று விளம்­ப­ரம் செய்து புது­யுக்­தி­யைத் தொடங்கி வைத்­த­னர். அதை­யடுத்து 'விக்­ரம்', 'விரு­மன்', 'கோப்ரா', 'கேப்­டன்' என்று பல படங்­கள் அதே வழி­யைப் பின்­பற்றி உள்­ளன.

"என்­னு­டைய படங்­க­ளுக்கு முன்பே இது­போன்ற விளம்­ப­ரங்­க­ளைச் செய்­துள்­ளேன். 'மாஞ்சா வேலு', 'மலை மலை' படங்­களை இப்­ப­டித்­தான் விளம்­ப­ரப்படுத்­தி­னோம்.

அப்­போது இந்த யுக்தி பெரி­தா­கப் பேசப்­ப­ட­வில்லை. இப்­போது சமூக ஊட­கங்­கள் இருப்­ப­தால் எல்­லாம் சாத்­தி­ய­மா­கிறது.

மேலும், ரசி­கர்­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டு­வது, சென்­னை­யில் இருந்­த­படியே வெளி­யூ­ரில் உள்ள திரை­ய­ரங்­கு­களில் படம் பார்க்க வரு­ப­வர்­களை உற்­சா­கப்­ப­டுத்­து­வது என பல­வற்றை திட்­ட­மிட்­டுச் செய்ய முடி­கிறது," என்­கி­றார் அருண் விஜய்.

'பார்­டர்' திரைப்­ப­டத்­தி­லும் வழக்கம் போல் சண்­டைக் காட்­சி­களில் மிரள வைத்­துள்­ளா­ராம். படம் மிக விரை­வில் வெளி­யீடு காண உள்­ளது.

அருண் விஜய்

, :

  