துல்கர் சல்மானும் மிர்ணாள் தாக்கூரும் இணைந்து நடித்த 'சீதா ராமம்' படம் வசூல், விமர்சன ரீதியில் வெற்றி பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, இருவரும் புதுப்படம் ஒன்றில் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர். ராணுவ வீரர் ஒருவர், எவ்வாறு கடிதம் வழி தன் காதலை வளர்க்கிறார் என்பதுதான் கதைக்கரு.
இந்தப் படத்தின் வசூல் இதுவரை 130 கோடி ரூபாயாக உள்ளது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் திரையுலக விவரப்புள்ளிகள் தெரிவித்துள்ளனர்.
திரையுலகில் சம்பாதித்த பணத்தை முதலீடு செய்வதில் கெட்டிக்காரர் என்று பெயர் வாங்கியுள்ளார் நயன்தாரா.
அவர் அடுத்தடுத்து புதிய சொத்துகளை வாங்கி வருவதாகத் தெரிகிறது. ஏற்கெனவே, சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் இரண்டு வீடுகளும் புறநரில் சில நிலங்களையும் வாங்கி உள்ள அவர், அடுத்து ஹைதராபாத் நகரை குறிவைத்துள்ளார்.
அங்குள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியிலும் தலா 15 கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு பங்களா வீடுகளை வாங்கியுள்ளாராம். மேலும், ஹைதராபாத்தை மையமாகக் கொண்டு சில வர்த்தக நடவடிக்கைகளையும் அவர் மேற்கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.
விஜய்யின் அடுத்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு கலந்துரை யாடல் நிகழ்வின்போது 'தளபதி-67' படத்தில், 'நீங்கள்தான் நாயகியா' என்று திரிஷாவிடம் கேட்கப்பட்டது.
அதற்கு ஆம், இல்லை என்று தெளிவாக பதில் அளிக்க மறுத்துவிட்ட அவர், வேறு படம் குறித்து பேசுவோம் என்றார்.
விஜய் படம் குறித்த தகவலை அவர் மறுக்கவில்லை என்பதால், அவர் மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிப்பது உறுதியாகி விட்டதாக ரசிகர்கள் சமூக ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளனர்.
நடிகை சமந்தா திடீரென திரையுலகப் பணிகளில் இருந்து விடுப்பு எடுத்துக் கொண்டுள்ளார். அடுத்த சில வாரங்களை சில வெளிநாடுகளில் ஓய்வாக கழிக்க விரும்புவ தாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சமந்தாவுக்கு மீண்டும் சருமப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அவர் கவலையில் இருப்பதாகவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது.
எனவே, வெளிநாட்டு நிபுணர்களிடம் சிகிச்சை பெறுவதற்காகவே அவர் வெளி நாட்டுப் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் சிகிச்சைக்குப் பிறகுதான் நாடு திரும்ப இருப்பதாகவும் கூறப்படுகிறது.
விஜய்யின் 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. படத்தின் இயக்குநர் வம்சியின் உடல்நலம் பாதிக்கப்பட்டதே இதற்குக் காரணம் என்றும் அடுத்த வாரம் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா சார்பாக ஆஸ்கர் விருதுப் போட்டிக்கு ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' படம் பரிந்துரைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், குஜராத்தி படமான
'செல்லோ சோ' பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

