ஆர்யா: உண்மையில் நான் ஒரு விளையாட்டுப் பிள்ளை

நடி­கர் ஆர்யா திரை­யு­ல­கில் அறி­மு­க­மாகி சுமார் இரு­பது ஆண்­டு­கள் ஆகின்­றன. இந்­நி­லை­யில் பல்­வேறு விளை­யாட்­டு­களில் கவ­னம் செலுத்­தி­ய­தால் தமது நடிப்­புத் திறமை மெரு­கே­றி­ய­தா­க­வும் ஒரு நடி­க­ராக தம்­மால் தாக்­குப்­பி­டிக்க முடி­கிறது என்­றும் அவர் பேட்டி ஒன்றில் தெரி­வித்­துள்­ளார்.

சைக்­கி­ளோட்­டம், மெது­வோட்­டம், எடை தூக்­கு­தல் எனப் பல்­வேறு விளை­யாட்­டு­க­ளி­லும் உடற்­ப­யிற்சி நட­ வ­டிக்­கை­க­ளி­லும் ஆர்­வம் கொண்­ட­வர் ஆர்யா. பல்வேறு உலக நாடு­களில் நடை­பெ­றும் மிதி­வண்­டிப் போட்­டி­களில் பங்­கேற்­பதை வழக்­க­மா­கக் கொண்­டுள்­ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் லண்­டன் எடின்­பர்க்கில் நடை­பெற்ற 1,540 கிலோ மீட்­டர் தூரத்­தைக் கடக்­கும் மிதிவண்டிப் போட்டி தமக்கு மிகப்­பெ­ரிய சவா­லாக அமைந்­தது என்று குறிப்­பி­டு­ப­வர், இந்­தப் போட்­டி­யில் பங்­கேற்­ற­தன் மூலம் தமது தன்­னம்­பிக்கை கூடி­யுள்­ளது என்­றும் ஒரு நடி­க­ராக தாம் இன்­னும் மேம்­பட்­டுள்­ள­தா­க­வும் கூறு­கி­றார்.

“125 மணி நேரத்­துக்­குள் போட்டி தூரத்தைக் கடந்­தாக வேண்­டும். அதைச் சாதிப்­பது அள்­வ­ளவு எளி­தல்ல. இலக்கை குறித்த நேரத்­தில் அடைய முடிந்­தது எனில், இதற்காக பல்­வேறு தியா­கங்­க­ளைச் செய்ய வேண்­டி­யி­ருந்­தது.

“எதிர்­காற்று வீசும்­போது மிதி வண்டியில் பய­ணம் செய்­வது மிகக் கடி­னம். எந்­த­வொரு கலை­யாக இருந்­தா­லும், ஒழுக்­க­மான அணுகு­மு­றை­யும் செயல்­பா­டும் மிக அவ­சியம். நான் பங்­கேற்­கும் விளை­யாட்­டு­கள் இந்த ஒழுக்­கத்­தைக் குறை­வின்­றிக் கற்­றுத் தரு­கின்றன. ஒழுக்­கம்­தான் வாழ்க்­கை­யில் வெற்­றி­யைத் தரும். நான் நல்ல உடல்­ந­லத்­து­டன் இருந்­தால்­தான் ஒரு நடி­க­னாக என்னை நூறு விழுக்­காடு வெளிப்­ப­டுத்த முடியும்,” என்­கி­றார் ஆர்யா.

அண்­மை­யில் வெளி­யான ‘கேப்­டன்’ படத்­தில் துணிச்­சல்­மிக்க ராணுவ வீர­ராக தம்­மால் கம்­பீ­ர­மாக நடிக்க முடிந்­த­தற்கு தமது கட்டொ­ழுங்­கான உடற்­கட்­டும் உடல்­ந­ல­மும்­தான் கார­ணம் என்று சுட்­டிக்­காட்­டு­ப­வர், இது­போன்ற கதா­பாத்­தி­ரங்­களில் எல்­லா­ரா­லும் நடித்து­விட இய­லாது என்­கி­றார்.

“இப்­போ­தெல்­லாம் கதா­நா­ய­கர்­க­ளி­டம் இருந்து இயக்­கு­நர்­கள் மிக அதி­க­மாக எதிர்­பார்க்­கி­றார்­கள். ஆழ்­க­டல் நீச்­சல் வீரர் முதல் விமானி வரை எத்­தகைய கதா­பாத்­தி­ரங்­க­ளை­யும் ஏற்க நாம் தயா­ராக இருக்கவேண்­டும்.

“அண்­மை­யில் வெளி­யான ‘கேப்­டன்’ படத்­தில் இடம்­பெ­றும் காட்­சிக்­காக நூறு அடி உய­ரத்­தில், அந்­த­ரத்­தில் கயிறு கட்டி என்­னைத் தொங்­க­விட்­ட­னர். கேர­ளா­வின் மூணாறு பகு­தி­யில் இந்­தக் காட்சி பட­மாக்­கப்­பட்­டது.

“இதே­போல் எந்­த­வி­த­மான கூடு­தல் பாது­காப்­புக் கரு­வி­களும் இல்­லா­மல் ஆழ்­க­டல் நீச்­ச­லு­டன் சம்­பந்­தப்­பட்ட காட்­சி­களும் படமாக்­கப்­பட்­டன. இதற்­காக குறு­கி­ய­கால பயிற்­சியை மேற்­கொண்டு, சுமார் 12 அடி ஆழத்­தில் நீச்­ச­ல­டித்­தேன்.

“இது­போன்ற ஆபத்­தான காட்­சி­களில் நடிக்கவேண்­டும் எனில், பல்­வேறு விளை­யாட்­டு­களில் பங்­கேற்று உங்கள் மன­தை­யும் உட­லை­யும் நல்ல நிலை­யில் வைத்­தி­ருக்க வேண்­டும்.

“இப்­ப­டி­ எல்­லாம் செய்­தால்­தான் இயக்கு­நரை­யும் ரசி­கர்­க­ளை­யும் கவர முடி­யும். அந்த வகை­யில் நான் ஒரு விளை­யாட்­டுப்பிள்ளை எனலாம்,” என்று சொல்லிச் சிரிக்­கி­றார் ஆர்யா.

இதற்கு முன்பு காத­லும் நகைச்­சுவை­யும் கொண்ட கதா­நா­ய­க­னாக ரசிகர்­களைக் கவர்ந்த இவர், இனி­மேல் அதி­ரடி நாய­க­னா­க­வும் பெயரெடுக்க விரும்­பு­கி­றா­ராம். அதே­ச­ம­யம் நகைச்­சு­வை­யைத் தம்­மால் கைவிட முடி­யாது என்­கி­றார்.

‘பாஸ் என்­கிற பாஸ்­க­ரன்’ படத்­தின் இரண்­டாம் பாகத்­தில் நடிக்க சந்­தா­னத்­தைப் போலவே ஆர்­யா­வும் ஆவ­லு­டன் இருக்­கி­றார்.

“நகைச்­சு­வை­யான கதா­பாத்­தி­ரங்­க­ளுக்­கா­க­வும் ஆவ­லு­டன் காத்­தி­ருக்­கி­றேன். எனி­னும் அத்­த­கைய கதை, கதா­பாத்­தி­ரங்­க­ளுக்­காக காத்­தி­ருப்­பது அவசி­யம். ஏனெ­னில் நல்ல இயக்­கு­நர், கதை, சக நடி­கர்­கள் அமைந்­தால்­தான் கதா­நாயகனின் பாத்­தி­ர­மும் எடு­படும்.

“சந்­தா­னத்­து­டன் மீண்­டும் இணைந்து நடிக்க பல மடங்கு ஆர்­வம் உள்ளது. இரு­வ­ருக்­குமே முக்­கி­யத்­துவம் அளிக்­கும் வகை­யில் கதை, திரைக்­கதை அமைக்­கப்­பட வேண்­டும். இரு­வ­ருமே நல்ல கதை­க­ளுக்­கா­கக் காத்­தி­ருக்­கி­றோம்.

“சந்தானத்துடன் இணையும் நாளுக்காகக் காத்திருக்கிறேன். சூழ்நிலை சாதகமாக அமைந்தால் இருவரும் இணைந்து நடிப்பது குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகக்கூடும்,” என்று நல்ல புரி­த­லுடன் பேசு­கி­றார் ஆர்யா.

, :

  

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!