‘சிரிக்க வைத்தேன்; இப்போது உயிருக்குப் போராடுகிறேன்’

இரு சிறு­நீ­ர­கங்­களும் செய­லி­ழந்து­விட்ட நிலை­யில், நகைச்­சுவை நடி­கர் போண்டா மணி உயிருக்குப் போராடி வரு­வ­தாக தக­வல் வெளியாகி உள்­ளது. அவர் தற்­போது சென்னை அரசு மருத்து­வ­மனை­யில் சிகிச்சை பெற்று வரு­கி­றார்.

நடி­கர் விவேக் உயி­ரோடு இருந்­தி­ருந்­தால் மருத்­துவ சிகிச்சைக்­கா­க­வும் தமது குடும்­பத்­துக்­கா­க­வும் யாரி­ட­மும் கையேந்த வேண்­டிய அவ­சி­யம் ஏற்­பட்­டி­ருக்­காது என்­கி­றார் போண்டா மணி.

“தக­வல் கிடைத்­தி­ருந்­தால் விவேக் ஓடி­வந்து உத­வி­யி­ருப்­பார். அதற்­காக யாருமே என்னைக் கண்­டு­கொள்­ள­வில்லை என்று சொல்­ல­மாட்­டேன்.

“மயில்­சாமி, பெஞ்­ச­மின் என்று என்­னு­டன் நடித்த நடி­கர்­கள் பலரும் நேரில் வந்து நலம் விசா­ரிக்­கி­றார்­கள். வடி­வேலு சாரு­டன் இணைந்த பிற­கு­தான் போண்டா மணி என்று ஒரு நடி­கர் இருப்­பது வெளியே தெரி­யத் தொடங்­கி­யது. நிறைய படங்­களில் நடித்­துள்­ளேன் என்­றா­லும் பெரிய அள­வில் சொத்து சேர்க்­க­வில்லை. சொந்த வீடு­கூட கிடை­யாது.

“என் மனைவி மாற்­றுத்­திறனாளி. என் மகள் பனி­ரெண்­டாம் வகுப்பு படிக்­கி­றார். மகன் பத்­தாம் வகுப்­பில் உள்­ளார். அன்­றா­டம் நான் சம்­பா­தித்­துக் கொடுக்­கும் பணத்தை நம்­பித்­தான் குடும்­பம் உள்­ளது. பிள்­ளை­க­ளைக் கரை சேர்க்கவேண்­டும் என்ற பொறுப்பு பயத்­தை­யும் கவ­லை­யை­யும் ஏற்­ப­டுத்­து­கிறது. அவர்­க­ளுக்­காக இது­வரை எது­வுமே சேர்த்து வைக்­க­வில்லை,” என்­கி­றார் போண்டா மணி.

“அண்­மை­யில் மூச்­சு­விட சிர­மப்­பட்­டேன். அப்­போது மேற்­கொள்­ளப்­பட்ட பல்­வேறு பரி­சோ­த­னை­களின் மூலம் இரண்டு சிறு­நீ­ர­கங்­களும் செய­லி­ழந்­து­விட்­டது தெரி­ய­வந்­தது.

“எல்­லா­ரை­யும் சிரிக்க வைத்­தேன். ஆனால் என் வாழ்க்­கை­யில் இப்­படி ஒரு துய­ரம் ஏற்­பட்­டதை என்­னால் தாங்­கிக்­கொள்ள முடி­ய­வில்லை. நான் யாருக்­கும் கெடு­தல் செய்­த­தில்லை. உட­னடி­யாக சிறு­நீ­ரக மாற்று அறுவை சிகிச்சை செய்­தால் மட்­டுமே சில காலம் வாழ முடி­யும். தமி­ழக அர­சும் எனது திரை­யு­லக நண்­பர்­களும் உத­வி­னால் நன்­றாக இருக்­கும்,” எனக் கண்­ணீர்க் கோரிக்கையை முன்­வைத்­துள்­ளார் போண்டா மணி. உயிருக்குப் போராடும் இவரை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விரைவில் சந்திக்க உள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!