விரைவில் வருகிறார் 'வேள்பாரி'

விரைவில் வருகிறார் 'வேள்பாரி'

3 mins read
d128d1b4-5847-42b6-8e41-d9f7cefb54a0
-

நடி­கர், தயா­ரிப்­பா­ளர், சமூக ஆர்­வ­லர் என எந்­தப் பொறுப்­பாக இருந்­தா­லும் கச்­சி­த­மா­கச் செயல்­ப­டக் கூடி­ய­வர் சூர்யா. நல்ல கதை­க­ளைத் தேர்வு செய்­வ­தி­லும் கெட்­டிக்­கா­ர­ராக உள்­ளார்.

'பாகு­பாலி', 'பொன்­னி­யின் செல்­வன்' ஆகிய படங்­களை அடுத்து, சூர்­யா­வும் சரித்­தி­ரப் படம் ஒன்­றில் நடிப்­ப­தாக அண்­மை­யில் தக­வல் வெளி­யா­னது. இந்­தப் படத்தை சங்­கர் இயக்­கு­வார் என்­றும் கூறப்­பட்­டது. இத­னால் சூர்யா ரசி­கர்­கள் உற்­சா­கம் அடைந்­துள்­ள­னர்.

மேலும், ஆயி­ரம் கோடி ரூபாய் செல­வில் இந்­தப் படம் உரு­வாக இருப்­ப­தா­க­வும் ஒரு தக­வல் பர­வி­யது. இதுகுறித்து சூர்யா, சங்­கர் தரப்­பில் உறுதி செய்­யப்­ப­ட­வில்லை.

எழுத்­தா­ள­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சு.வெங்­க­டே­சன் எழு­திய 'வேள்­பாரி' நாவ­லைத்­தான் சங்­கர் திரைப்­ப­ட­மாக்க உள்­ளார் என்­றும் இதில் நடிக்க சூர்யா சம்­ம­தித்­துள்­ளார் என்­றும் தமி­ழக ஊட­கம் தெரி­விக்­கிறது.

தமிழ் சினிமா ரசி­கர்­கள் இந்த செய்தி குறித்து சமூக ஊட­கங்­களில் இப்­போதே விவா­திக்­கத் தொடங்­கி­விட்­ட­னர்.

இயக்­கு­ந­ரும் கதா­நா­ய­க­னும் ஏதும் தெரி­விக்­காத நிலை­யில், இந்­தப் படம் குறித்த தக­வல்­களை எப்­படி நம்ப முடி­யும் என்று ஒரு தரப்­பி­னர் கேள்வி எழுப்­பி­யுள்­ள­னர்.

ஆனால், விவ­ர­ம­றிந்­த­வர்­களோ, அண்­மை­யில் மது­ரை­யில் 'விரு­மன்' பட விழா­வை­யும் அதில் பேசப்­பட்ட விஷ­யங்­க­ளை­யும் சுட்­டிக்­காட்­டு­கின்­ற­னர்.

இந்த நிகழ்­வில் சூர்யா, சங்­கர், சு.வெங்­க­டே­சன் ஆகி­யோர் கலந்­து­கொண்­ட­னர். நிகழ்ச்­சி­யில் பேசிய சங்­கர், சூர்யா தொடர்ந்து நல்ல கதை­க­ளைத் தேர்வு செய்து நடிப்­ப­தா­கப் பாராட்­டி­னார்.

"கல்வி, விவ­சா­யம் உள்­ளிட்ட துறை­க­ளி­லும் அவர் சிறப்­பா­கச் செயல்­ப­டு­வ­தைப் பாராட்ட வேண்டும்," என்­றும் சங்­கர் குறிப்­பிட்­டார்.

இதே­போல், அந்த விழா­வில் கலந்து­கொண்ட மற்ற பிர­மு­கர்­களும் சூர்­யா­வுக்கு பாராட்டு தெரி­வித்­த­னர்.

இதை­ய­டுத்து பேசிய சூர்யா, தமி­ழர்­க­ளின் முக்­கி­ய­மான அடை­யா­ள­மாக 'காவல் கோட்­டம்', 'வேள்­பாரி' ஆகிய நாவல்­க­ளைக் குறிப்­பி­ட­லாம் என்­றார்.

"இந்­தப் படைப்­பு­க­ளைத் தந்த எழுத்­தா­ளர் சு.வெங்­க­டே­ச­னோடு பய­ணிப்­பது அழ­கான அனு­ப­வ­மாக இருக்­கும். அது­கு­றித்து இப்­போது பேச இய­லாது. அடுத்து அமை­யும் மேடை­யில் இது­கு­றித்து விரி­வா­கச் சொல்­கி­றேன்," என்று புதிர் போட்­டார் சூர்யா.

விழா மேடை­யில் அமர்ந்­தி­ருந்த சங்­கர் இதைக் கேட்டு புன்­ன­கைத்­தார். இதன் மூலம் 'வேள்­பாரி' நாவல் திரைப்­ப­ட­மா­வது உறு­தி­யா­கி­விட்­ட­தாக ரசி­கர்­கள் கூறு­கின்­ற­னர்.

சூர்யா இப்­போது பாலா­வின் இயக்­கத்­தி­லும் 'சிறுத்தை' சிவா­வின் இயக்­கத்­தி­லும் நடித்து வரு­கி­றார். அடுத்து வெற்­றி­மா­ற­னின் 'வாடி­வா­சல்' படத்­தை­யும் கைவ­சம் வைத்­தி­ருக்­கி­றார்.

அதே போல், சங்­கர் இப்­போது தெலுங்­கில் ராம்­ச­ரண் நடிக்­கும் படத்­தை­யும் கமல் நடிக்­கும் 'இந்­தி­யன்' இரண்­டாம் பாகத்­தை­யும் இயக்கி வரு­கி­றார். எனவே, சங்­கர், சூர்யா இணை­யும் படம் எப்­போது தொடங்­கும் என்­பது இன்­னும் உறு­தி­யா­க­வில்லை.

சூர்யா இப்­போது சிவா இயக்­கத்­தில் நடித்து வரும் படத்­தின் கதை, ஒரு குறிப்­பிட்ட கால­கட்­டத்­தில் நடக்­கும் சம்­ப­வங்­க­ளின் தொகுப்­பாம். எனவே, படப்­பி­டிப்பு நிதா­ன­மா­கத்­தான் நடந்து வரு­கிறதாம்.

வெற்­றி­மா­ற­னும் 'வாடி­வா­சல்' படத்­தின் பணி­களில் இன்­னும் உரிய வேகம் காட்­ட­வில்லை எனக் கூறப்படுகிறது.

இந்­நி­லை­யில், 'வேள்­பாரி' சரித்­தி­ரக் கதை என்­ப­தால், அதற்­கான சூழல்­கள், தொழில்­நுட்ப அம்­சங்­கள் எனப் பல்­வேறு விஷ­யங்­கள் குறித்து சங்­க­ரும் சூர்­யா­வும் விவா­தித்து வரு­கின்­ற­னர் என்­றும் படத்­தயாரிப்பு தொடர்பில் இரு­வ­ருக்­கும் உள்ள சந்­தே­கங்­கள் முடி­வுக்கு வந்த பிறகே, இந்­தப் படம் குறித்த அதி­கா­ர­பூர்வ அறி­விப்பு வெளி­யா­கும் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

இதற்கிடையே சூர்யாவின் சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனம் மூன்று இளம் இயக்குநர்களை வைத்து அடுத்தடுத்து படங்களைத் தயாரிக்க உள்ளதாம்.

மூன்று படங்களுமே மிக வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்டவை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.