மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கும் அசோக் செல்வன்

மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கும் அசோக் செல்வன்

1 mins read
7e46efff-f05a-4cb7-9559-f9a0a5e9f933
'நித்தம் ஒரு வானம்' படத்தில் அசோக் செல்வன், ரித்துவர்மா. -

அறி­முக இயக்­கு­நர் ஆர். கார்த்­திக் இயக்­கத்­தில் அசோக் செல்­வன் கதா­நா­ய­க­னாக நடிக்­கும் படம் 'நித்­தம் ஒரு வானம்'.

இதில், அபர்ணா பால­மு­ரளி, ரித்து வர்மா, சிவாத்­மிகா ராஜ­சே­கர் ஆகி­யோர் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களில் நடிக்­கின்­ற­னர்.

மலை­யாள இசை­ய­மைப்­பா­ளர் கோபி சுந்­தர் இசை­ய­மைத்­துள்­ளார். இப்­ப­டம் மலை­யா­ளத்­தில் 'ஆகா­சம்' என்ற தலைப்­பில் உருவா­கி உள்­ளது.

அண்­மை­யில் இப்­ப­டத்­தின் கதா­பாத்­தி­ரங்­களை படக்­கு­ழு­வி­னர் அறி­மு­கம் செய்து சில சுவ­ரொட்­டி­களை வெளி­யிட்­டனர். இதற்கு ரசி­கர்­கள் மத்­தி­யில் நல்ல வர­வேற்பு கிடைத்­தது.

இந்­நி­லை­யில், இப்­ப­டத்­தின் குறு முன்­னோட்ட தொகுப்­பை­யும் வெளி­யிட்­டுள்­ள­னர்.

இதை இயக்­கு­நர் அட்லீ தனது சமூக வலை­த்த­ளப் பக்கத்­தில் பகிர்ந்­துள்­ளார்.

"குறு முன்­னோட்­டத் தொகுப்­புக்­கும் ரசி­கர்­க­ளி­டம் நல்ல வர­வேற்பு கிடைத்­துள்­ளது.

"இப்­படத்­தில் அசோக் செல்­வன் மூன்று கதா­பாத்­தி­ரங்­களில் நடித்­துள்­ளார். இந்­தப் படம் அவ­ருக்­குப் பெயர் வாங்­கித் தரும்," என்­கி­றார் இயக்­கு­நர் ஆர்.கார்த்திக்.