'துணிவு' படத்தின் புதிய சுவரொட்டிக்கு வரவேற்பு

'துணிவு' படத்தின் புதிய சுவரொட்டிக்கு வரவேற்பு

1 mins read
354e1c97-716f-40ea-8e75-861955c1cfa7
'துணிவு' படத்தின் சுவரொட்டி. -

அஜித் நடிக்­கும் 'துணிவு' படத்­தின் சுவ­ரொட்டி வெளி­யாகி உள்­ளது. இதை அவ­ரது ரசி­கர்­கள் இணை­யத்­தில் பர­வ­லா­கப் பகிர்ந்து வருகின்­ற­னர்.

நேற்று முன்­தி­னம்­தான் அஜித்­தின் 61வது படத்­துக்கு 'துணிவு' என தலைப்பு அறி­விக்­கப்­பட்­டது. மேலும் கையில் துப்­பாக்­கி­யு­டன் அவர் காட்சி தரும் முதல் தோற்றச் சுவ­ரொட்­டி­யும் வெளி­யா­னது.

ஹெச்.வினோத் இயக்­கத்­தில் அஜித் நடிக்­கும் மூன்­றா­வது திரைப்­ப­டம் இது. இதை போனி கபூர் தயா­ரித்து வரு­கி­றார்.

இந்த நிலை­யில் 'துணிவு' படத்­தின் சுவ­ரொட்டி வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. இது­வும் அஜித் ரசி­கர்­களை உற்­சா­க­ம­டைய வைத்துள்ளது.

அடுத்­த­கட்­ட­மாக முக்­கிய சண்டைக் காட்­சி­க­ளைப் பட­மாக்க உள்­ளது துணிவு படக்­குழு.

முன்­னணி சண்­டைப் பயிற்­சி­யா­ளர்­க­ளான அன்­ப­றிவு இரட்­டை­யர்­கள் இந்­தச் சண்­டைக் காட்­சி­களை அமைக்க உள்­ள­தா­கத் தகவல்.

இப்­ப­டம் அடுத்த ஆண்டு பொங்­க­லுக்கு திரை காணும் என எதிபார்க்கப்படுகிறது.