'கரகாட்டக்காரன்' இரண்டாம் பாகம்

'கரகாட்டக்காரன்' இரண்டாம் பாகம்

2 mins read
514fcc84-c44b-475f-9b57-f10d2e9e6983
-

'கர­காட்­டக்­கா­ரன்' படத்­தின் இரண்­டாம் பாகம் உரு­வாக இருப்­ப­தாக ஒரு தக­வல் வெளி­யாகி உள்­ளது.

அதில், விஜய் சேது­பதி நாய­க­னாக நடிக்க வாய்ப்­புள்­ள­தாக கூறப்­ப­டு­கிறது. இத­னால் அவ­ரது ரசி­கர்­கள் உற்­சா­கம் அடைந்­துள்­ள­னர்.

பல ஆண்­டு­க­ளுக்கு முன்பு கங்கை அம­ரன் இயக்­கத்­தில் உரு­வான 'கர­காட்­டக்­கா­ரன்' படம் மாதக்­க­ணக்­கில் திரை­ய­ரங்­கு­களில் ஓடி பெரும் வெற்றி பெற்­றது. ராம­ரா­ஜ­னும் கன­கா­வும் நாய­கன், நாய­கி­யாக நடித்த அப்­ப­டத்­தின் பாடல்­களும் நகைச்­சு­வைக் காட்­சி­களும் திரைக்­க­தை­யும் இன்­ற­ள­வும் ரசிக்­கப்­ப­டு­கின்­றன.

இந்­நி­லை­யில், அதன் இரண்­டாம் பாகத்தை எடுப்­ப­தற்­கான முயற்சியில் இயக்­கு­நர் கங்கை அம­ரன் ஈடு­பட்­டார். கீர்த்தி சுரேஷை நாய­கி­யாக நடிக்க வைப்­பது அவ­ரது திட்­ட­மாக இருந்­தது.

அதே­போல், ராம­ரா­ஜன் கதா­பாத்­தி­ரத்­தில், பக்­கத்து ஊரைச் சேர்ந்த நட­னக் கலை­ஞ­ராக விஜய் சேது­பதியை நடிக்க வைக்க முடிவு செய்­தி­ருந்­தார் கங்கை அம­ரன்.

கதைப்­படி, கீர்த்தி சுரே­ஷின் தந்தை வேடத்­தில் நடிக்க ராம­ரா­ஜ­னி­டம் பேச்­சு­வார்த்தை நடை­பெற்­ற­தாம். அவர் கதா­நா­ய­க­னாக மட்­டுமே நடிக்க விருப்­பம் என்று திட்­ட­வட்­ட­மாக கூறி­யதை அடுத்து, இரண்­டாம் பாகத்­துக்­கான முயற்­சி­யைக் கைவிட்­டு­விட்­டார் கங்கை அம­ரன்.

இந்­நி­லை­யில், முன்­னணி படத்­தயா­ரிப்பு நிறு­வ­னம் ஒன்று, இந்த முயற்­சியை முன்­னெ­டுத்­துள்­ளது. கங்கை அம­ரன் திட்­ட­மிட்­ட­ப­டியே, கீர்த்தி சுரே­ஷை­யும் விஜய் சேது­ப­தி­யை­யும் ஒப்­பந்­தம் செய்ய அந்­நி­று­வ­னம் திட்­ட­மிட்­டுள்­ள­தா­க­வும் ராம­ரா­ஜ­னுக்­குப் பதில் ராஜ்­கி­ரண் போன்ற மூத்த நடி­கரை ஒப்­பந்­தம் செய்ய இருப்­ப­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

ராம­ரா­ஜன் இப்­போது 'சாமா­னி­யன்' என்ற படத்­தில் நாய­க­னாக நடித்து வரு­கி­றார். இது­கு­றித்து கருத்து தெரி­வித்­துள்ள கங்கை அம­ரன், நீண்ட இடை­வெ­ளிக்­குப் பிறகு மீண்­டும் கள­மி­றங்­கும் ராம­ரா­ஜன் வெற்றி பெற வாழ்த்­து­வ­தா­கக் குறிப்­பிட்­டுள்­ளார்.

"என்­னைப் பொறுத்­த­வரை, இயக்­கு­நராக கதைக்கு என்ன மாதி­ரி­யான நடிப்பு வேண்­டுமோ, அதை நடி­கர்­க­ளி­டம் இருந்து பெறு­வேன். ராம­ரா­ஜ­னி­ட­மும் அப்­ப­டித்­தான் என்­றா­லும், தனிப்­பட்ட முறை­யில் அவரை எனக்குப் பிடிக்கும். அவர் சாமானியனல்ல, அசாதரணமானவர்," என்கிறார் கங்கை அமரன்.