'நான் நடிகன், நட்சத்திரமல்ல'

'நான் நடிகன், நட்சத்திரமல்ல'

3 mins read
c237e8d2-208e-454e-a81a-c76d0c5ea564
-

தமிழ், தெலுங்கு, மலை­யா­ளம் என மூன்று மொழி­க­ளி­லும் நடித்து வரு­கி­றார் துல்­கர் சல்­மான். ரசி­கர்­கள் தம்­மி­டம் என்ன எதிர்­பார்க்­கி­றார்­கள் என்­பதை நன்கு உணர்ந்த நடி­கர்­களில் துல்­க­ரும் ஒரு­வர் என திரை­யு­ல­கத்­தி­னர் பாராட்­டு­கி­றார்­கள்.

வெற்றி, தோல்­வி­களை இயல்­பாக எதிர்­கொள்­ளும் துல்­கர், தமக்கு 'பாக்ஸ் ஆஃபீஸ்' கணக்­கு­களில் ஆர்­வம் இல்லை என்­கி­றார். எனி­னும் படத்­தின் வசூலை வைத்­துத்­தான் அடுத்­த­கட்ட நகர்­வு­கள் தீர்­மா­னிக்­கப்­ப­டு­கின்­றன என்­பதை உணர்ந்­துள்­ள­தா­க­வும் சொல்­கி­றார்.

"ஏன் எந்த மொழி­யி­லும் தொடர்ச்­சி­யா­க­வும் அதிக படங்­க­ளி­லும் நடிப்­ப­தில்லை என்று கேட்­கி­றார்­கள். மலை­யா­ளத்­தில் எனது படங்­கள் வெளி­யா­கும் போது ஒரு­வித பர­ப­ரப்பை மன­தில் உணர்­வேன். கார­ணம், அங்கு எடுத்த எடுப்­பி­லேயே புதுப்­ப­டங்­க­ளுக்கு வர­வேற்பு கிடைக்க வேண்­டும். அதிக வசூ­லைக் கொடுக்க வேண்­டும் எனும் நிர்­பந்­தங்­கள், எதிர்­பார்ப்­பு­க­ளுக்கு மத்­தி­யில்­தான் புதுப்­பட வெளி­யீடு இருக்­கும். ஒரு படத்­தின் வசூலை வைத்­துத்­தான் சில முடி­வு­களை எடுக்க வேண்­டி­யுள்­ளது.

"இந்தி, தெலுங்கு, தமிழ் படங்­களில் என்­னால் சிறப்­பாக நடிக்க முடி­யும் எனில், எந்த மொழி­யி­லும் என்­னால் சாதிக்க முடி­யும். எத்­த­கைய சவா­லான கதைக்­க­ளங்­கள், கதா­பாத் திரங்­க­ளாக இருந்­தா­லும் அவற்றை ஏற்று நடிக்­கத் தயார்.

"என்­னைப் பொறுத்­த­வரை துல்­கர் சல்­மான் என்­ப­வர் ஒரு நடி­க­ராக மட்­டுமே ரசி­கர்­க­ளால் அறி­யப்­பட வேண்­டும். மாறாக திரை நட்­சத்­தி­ர­மாக பிர­ப­ல­மா­வ­தில் எனக்கு விருப்­ப­வில்லை. இப்­ப­டிச் சொல்­வ­தால் ஒரு­சி­லர் கிண்­டல் செய்­யக்­கூ­டும். உண்­மை­யில் இது­ஒரு விசித்­தி­ர­மான, வித்­தி­யா­ச­மான பய­ணம் தான். அதே­ச­ம­யம் இந்­தப் பய­ணத்­தின் ஒவ்­வொரு நிமி­டத்­தை­யும் நான் ரசித்து அனு­ப­வித்து வரு­கி­றேன்," என்­கி­றார் துல்­கர் சல்­மான்.

தன்­னைப் பற்­றிய விமர்­ச­னங்­களை திறந்த மன­து­டன் வர­வேற்­ப­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், ரசி­கர்­க­ளுக்­கும் விமர்­ச­கர்­க­ளுக்­கும் தம்­மி­டம் என்ன பிடிக்­க­வில்லை என்­பதை அறிந்து கொள்­வ­தில் மகிழ்ச்சி ஏற்­ப­டு­வ­தா­கச் சொல்­கி­றார்.

"இது­போன்ற விஷ­யங்­களை அறி­வ­தன் மூலம் நம்மை மெரு­கேற்­றிக்­கொள்ள இய­லும். நல்ல கதை­க­ளைத் தேர்வு செய்­ய­வும் உத­வும். பொது­வாக என்­னைப் பற்றி சொல்­லப்­படும் நூறு நல்ல விஷ­யங்­களை நான் பெரி­தா­கக் கரு­து­வ­தில்லை. மூன்று பேர் குறை சொல்­கி­றார்­கள் எனில், அவற்றை நிவர்த்தி செய்­வ­தில் கவ­னம் செலுத்­து­வேன்.

"எனது குணா­தி­ச­யம் எப்­ப­டிப்­பட்­டது என்­பதை குடும்­பத்­தார் நன்கு புரிந்து வைத்­துள்­ள­னர். ஒரு புதுப்­ப­டம் வெளி­யா­கும் நாளன்று சிறுத்­துப்­போன முகத்­து­டன் வீட்­டைச் சுற்றி நடந்து கொண்­டி­ருந்­தால், உடனே விசா­ரணை தொடங்­கி­வி­டும். 'கைப்­பே­சி­யில் என்ன படித்­துக் கொண்­டி­ருக்­கி­றாய்... படித்­த­வரை போதும்' என்­பார்­கள். எனது படங்­கள் குறித்த விமர்­ச­னங்­கள் அனைத்­தை­யும் தவ­றா­மல் படித்­து­வி­டும் பழக்­கம் இப்­போது வந்­துள்­ளது," என்­கி­றார் துல்­கர்.

இவ­ரது நடிப்­பில் அண்­மை­யில் வெளி­யீடு கண்ட 'சீதா ராமம்' படத்­துக்கு நல்ல வர­வேற்பு கிடைத்­துள்­ளது. வசூல் அதி­க­ரித்து வரு­வது துல்­க­ருக்­கும் மகிழ்ச்சி அளித்­துள்­ளது.

"இந்­தப் படத்­துக்­காக அனை­வ­ரும் நிறைய மெனக்­கெட்­டோம். காஷ்­மீ­ரில் கடும் பனிப்­பொ­ழிவு இருந்த வேளை­யில் படப்­பி­டிப்பை நடத்­தி­னோம்.

"தண்­ணீர் உறைந்­து­போன பகுதி களில் மைனஸ் 22 டிகிரி குளி­ரில் காட்­சி­கள் பட­மாக்­கப்­பட்­ட­போது, அனை வருமே விறைத்­துப் போனோம். படக் குழு­வில் இருந்த சில­ருக்கு உடல்­ந­லம் பாதிக்­கப்­பட்­டது.

"படப் பிடிப்­பின்­போது ஆம்­பு­லன்ஸ் வாக­னங்­கள் தயார்­நி­லை­யில் நிறுத்­தப் பட்­டி­ருந்­தன. இந்­தப் படம் தனிச்­சி­றப்பு வாய்ந்­தது என்­றும் பெரிய அள­வில் வெற்­றி­பெ­றும் என்­றும் அனை­வ­ரும் நம்­பி­னோம்.

"அது­தான் மொத்த படக்­கு­ழு­வை­யும் கடு­மை­யாக உழைக்­கத் தூண்­டி­யது," என்று சொல்­லும் துல்­கர் சல்­மான், அடுத்து 'சுப்' என்ற இந்­திப் படத்­தில் நடித்து வரு­கி­றார்.

இந்­தியா முழு­வ­தும் உள்ள ரசி­கர்­க­ளுக்­குப் பொருத்­த­மான (பான் இந்­தியா) படம் என்று முத்­திரை குத்­தப்­ப­டு­வதை தம்­மால் ஏற்க முடி­ய­வில்லை என்­றும் நல்ல கதை­யம்­சம் உள்ள படங்­கள் என்­றால் எல்லா மொழி­யி­ன­ரும் அவற்றை ரசிப்­பார்­கள் என்­றும் சொல்­கி­றார் துல்­கர்.