இரு சிறுநீரகங்களையும் இழந்து உயிருக்குப் போராடிய நடிகர் போண்டா மணிக்கு உதவிகள் குவிந்து வருகின்றன. அவரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சிகிச்சை செலவு முழுவதும் அரசாங்கம் ஏற்கும் என்றார். நடிகர் பார்த்திபன் மருந்துகளுக்கான செலவை ஏற்பதாக அறிவித்த நிலையில், விஜய் சேதுபதி ஒரு லட்சம் ரூபாய் அளித்துள்ளார். வடிவேலு தொலைபேசி வழி தொடர்பு கொண்டு உதவிக்கரம் நீட்டுவ தாகச் சொன்ன நிமிடத்திலேயே தாம் பாதி குணமடைந்துவிட்ட தாகத் தெரிவித்துள்ளார் போண்டா மணி.
'பாலியல் சீண்டல் தொடர்பாக புகார் எழுப்பியதால் தம்மை நஞ்சு வைத்துக் கொல்ல முயற்சி நடந்ததாகச் சொல்கிறார் தனுஸ்ரீ தத்தா.
தமிழில் 'தீராத விளையாட்டு பிள்ளை' உட்பட பல்வேறு மொழிகளில் நாயகியாக நடித்துள்ள இவர், பிரபல வில்லன் நடிகர் நானா படேகர் மீது 'மீடூ' புகார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான, 'வெண்ணிலா கபடிக்குழு', 'குள்ளநரி கூட்டம்', கார்த்தி நடித்த 'நான் மகான் அல்ல' ஆகிய படங்களில் நடித்தவர் ஹரி வைரவன். அதன் பிறகு பட வாய்ப்புகள் ஏதும் அமையவில்லை. இந்நிலையில் நீரிழிவு நோய் உட்பட பல உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள ஹரி வைரன், சிகிச்சை பெற வசதியற்ற நிலையில், 'கோமா' நிலைக்குச் சென்று, பின்னர் பிழைத்து வந்துள்ளார். எனினும் உரிய சிகிச்சை பெறாவிட்டால் ஆறு மாதங்கள் கூட உயிர்வாழ முடியாது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனராம். உதவிக் காக காத்திருக்கிறார் ஹரி.

