முதல் இடத்தில் சமந்தா

முதல் இடத்தில் சமந்தா

1 mins read
7c078161-af32-49cf-a2bd-6cd21c57f31f
நடிகை சமந்தா. -

இந்­தியா முழு­வ­தும் ரசி­கர்­கள் மத்தி­யில் பிர­ப­ல­மாக உள்ள கதா­நா­யகி­கள் குறித்து அண்­மை­யில் நடத்­தப்­பட்ட கருத்துக்கணிப்­பில் நடிகை சமந்தா முத­லி­டம் பிடித்­துள்­ளார்.

இதற்கு மொழி மாற்­றுப் படங்­களின் எண்­ணிக்கை முக்­கிய கார­ண­மாக உள்­ளது.

தமி­ழில் தயா­ரா­கும் படங்­களை தெலுங்கு, இந்தி, கன்­ன­டம், மலை­யா­ளம் என்று 'பான் இந்­தியா' படங்­க­ளாக வெளி­யிடத் தொடங்கி உள்­ள­னர். இது­போல் இந்தி, தெலுங்­கில் தயா­ரா­கும் படங்­க­ளை­யும் அனைத்து மொழி­க­ளி­லும் வெளி­யிட்டு வசூல் பார்க்­கி­றார்­கள்.

இந்­நி­லை­யில் அண்­மைய கருத்­துக்கணிப்­பில் முதல் பத்து இடங்­களைப் பிடித்­துள்ள நாய­கி­க­ளின் பட்­டி­யல் வெளி­யாகி உள்­ளது.

அதில் சமந்தா முதல் இடத்தைப் பிடித்து இருக்­கி­றார். இதை அவ­ரது ரசி­கர்­கள் பெரிய சாதனை என சமூக ஊட­கங்­களில் கொண்­டாடி வரு­கி­றார்­கள். சமந்­தா­வுக்கு அடுத்த இடங்­களில் முறையே அலியா ­பட், நயன்­தாரா, காஜல் அகர்­வால், தீபிகா படு­கோன், ராஷ்­மிகா மந்­தனா, கீர்த்தி சுரேஷ், கத்­ரினா கைஃப், பூஜா ஹெக்டே, அனுஷ்கா ஆகி­யோர் உள்­ள­னர்.