மீண்டும் தொடங்கியது அஜித், விஜய் ரசிகர்களின் போட்டி

‘அஜித் 61’ படம் குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருவது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்தப் புதிய படம் வங்கிக்கொள்ளைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகிறது.

படத்துக்குப் பூசை போட்டபோதே இந்தத் தகவல் கசிந்து விட்டது. படக்குழுவினரும் இதுகுறித்து அலட்டிக்கொள்ள வில்லை. இயக்குநர் ஹெச்.வினோத்தே இதை ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் ‘அஜித் 61’ படத்துக்கு ‘துணிவு’ என்று தலைப்பு வைத்துள்ளனர். படம் குறித்த கூடுதல் தகவல் களும் வெளிவந்துள்ளன.

“இது வங்கிக் கொள்ளையுடன் சம்பந்தப்பட்ட கதைதான். ஆனால் அந்தக் கொள்ளைச்சம்பவம் 35 ஆண்டுகளுக்கு முன் நிகழ்கிறது.

“உண்மையில் பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் இயங்கி வந்த மிகப்பெரிய வங்கியில் கொள்ளையர்கள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.

“இந்த வங்கிக்கொள்ளை ஒட்டு மொத்த இந்தியாவையும் உலுக்கி எடுத்தது. இந்தச் சம்பவத்தைத்தான் தனக்கே உரிய பாணியில் விறுவிறுப் பான திரைக்கதையுடன் இயக்கி வருகிறார் ஹெச்.வினோத்.

“இதற்கு முன்பு அஜித்தை வைத்து அவர் இயக்கிய ‘வலிமை’ படம் பல்வேறு காரணங்களால் எதிர்பார்த்த வசூலைப் பெறவில்லை. அதற்கு கொரோனா நெருக்கடியும் ஒரு காரணம்.

“அடர்த்தியான கதை, புருவம் உயர்த்த வைக்கும் அதிரடிச் சம்பவங்கள், காவல்துறை சம்பந்தப்பட்ட கதை போன்ற அம்சங்கள்தான் வினோத்தின் அசைக்க முடியாத பலம் எனலாம். தனது ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் அவர் இதை நிரூபித்தார். ஆகையால், இம்முறை தன்னை மீண்டும் நிரூபிக்கவே உண்மைச் சம்பவம் ஒன்றை அவர் கையிலெடுத்துள்ளார்,” என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப்புள்ளிகள்.

கடந்த 1987ஆம் ஆண்டு லூதியானா பகுதியில் அக்குறிப்பிட்ட வங்கிக்கொள்ளை நடந்தது. கொள்ளை யர்கள் நன்கு திட்டமிட்டுச் செயல்பட்டனர். அனைவருமே காவல்துறை அதிகாரிகள் போல் உடையணிந்து வங்கிக்குள் நுழைந்தனர்.

மொத்தம் 4.5 மில்லியன் டாலருடன் கொள்ளையர்கள் தப்பிச்சென்றனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் மக்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

கொள்ளையர்கள் இந்தியாவில் தங்கியிருந்தால் காவல்துறையிடம் சிக்க நேரிடும் என்ற பயத்தில் தாய்லாந்து தலைநகர் பேங்காக்குக்கு தப்பிச்செல்வது போன்றும் அங்கே காவல்துறை அதிகாரியான அஜித் அவர்களை வேட்டையாடுவதாகவும் கதை நீள்கிறது.

மீண்டும் வில்லன், நாயகன் என அஜித் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். காவல்துறை அதிகாரி அஜித்தின் நெருங்கிய நண்பராகவும் உடன் பணியாற்றும் அதிகாரியாகவும் சமுத்திரக்கனி நடிப்பதாகத் தகவல்.

“எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிப்பதை அஜித் தரப்பு மேலோட்டமாக உறுதி செய்துள்ளது. எனினும் கதையின் திருப்புமுனை கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் சஞ்சய் தத் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ‘கேஜிஎஃப் 2’ படத்தில் வில்லனாக மிரட்டல் நடிப்பை வழங்கி இருந்தார் சஞ்சய் தத். எனவே அவர் நடித்தால் இந்திப் பதிப்பு நல்ல விலைக்கு விற்பனையாகும் எனத் தயாரிப்புத் தரப்பு திட்டமிட்டுள்ளது.

“நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷின் கூட்டணியில் உருவாகும் ‘விஜய் 67’ படத்திலும் சஞ்சய் தத் வில்லனாக நடித்தா லும், அஜித்தின் ‘துணிவு’ படம்தான் அவருக்கு தமிழில் முதல் படமாக இருக்கும்,” என்றும் விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.

‘துணிவு’ படத்தில் வழக்கத்தைவிட அதிகமான சண்டைக்காட்சிகள் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது. படம் முழுவதும் வெள்ளைத் தாடியுடன்தான் வலம்வருவாராம்.

பாடல் காட்சிகளில் மட்டுமாவது தோற்றத்தை மாற்றவேண்டும் என இயக்குநர் வினோத் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அது குறித்து அஜித் இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் ஒரு தகவல் தெரிவிக்கிறது.

இதற்கிடையே, விஜய்யின் ‘வாரிசு’, அஜித்தின் துணிவு படங்களை முன்வைத்து இருதரப்பு ரசிகர்களும் சுவரொட்டி யுத்தத்தை தொடங்கி உள்ளனர்.

‘துணிவு’ படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டி வெளியானதை அடுத்து, அதில் இடம்பெற்றுள்ள அஜித்தின் புதிய தோற்றத்துடன் கூடிய சுவரொட்டிகளை அச்சிட்டு, மதுரை மாநகர் முழுவதும் அவரது ரசிகர்கள் அவற்றை ஒட்டியுள்ளனர்.

இது விஜய் ரசிகர்களை உசுப்பேற்ற, அவர்களும் தங்கள் பங்குக்கு விஜய்யின் ‘வாரிசு’ படத்துக்கு வாழ்த்து தெரிவித்து மதுரையில் சுவரொட்டிகளை ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இரு படங்களும் வெளியீடு காணும் வரை இந்தச் சுவரொட்டி மோதல் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படு கிறது.

இரு படங்களும் நேரடியாக மோதிக்கொள்வதில் அஜித், விஜய் இருவருக்குமே விருப்பம் இல்லை என்றும் தகுந்த இடைவெளி விட்டே தங்கள் படங்களை வெளியிட இருவரும் முடிவு செய்துள்ள தாகவும் தெரிகிறது.

, :   

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!