திரைத் துளி­கள்

 ‘இந்­தி­யன் 2’ படப்­பி­டிப்பு தொடங்கி உள்ள நிலை­யில், அப்­ப­டத்­தின் நாய­கி­களில் ஒரு­வ­ரான காஜல் அகர்­வால் கள­ரிப் பயிற்­சி­யில் ஈடு­பட்­டுள்­ளார்.

கதைப்­படி, காஜ­லுக்கு சில சண்­டைக் காட்­சி­கள் உள்­ள­ன­வாம். அவை ‘பிளாஷ்­பேக்’ காட்சி­க­ளாக இடம்­பெற உள்­ளன. இதற்­கா­கத்­தான் கள­ரிப் பயிற்­சி­யாம். காஜல் பயிற்சி மேற்­கொள்­ளும் காட்­சி­களும் புகைப்­படங்­களும் சமூக ஊட­கங்­களில் பலத்த வர­வேற்­றைப் பெற்­றுள்­ளன.

 இளம் நாயகி கிரித்தி ஷெட்டி அறிமுகமாகி ஓராண்டு ஆகிவிட்டது. இதைக் கொண்டாடும் விதமாக, ‘நிஷ்னா’ என்ற பெயரில் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி உள்ளார்.

‘நிஷ்னா’ என்பது தனது பெற்றோரின் பெயர்களை இணைத்து உருவாக்கப்பட்ட பெயராம்.

இதன் மூலம் ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் இயன்ற உதவிகளைச் செய்யப் போவதாகக் கூறியுள்ளார் கிரித்தி ஷெட்டி. அவர் தற்போது தெலுங்கில் நாக சைதன்யாவுடனும் தமிழில் பாலா இயக்கத்தில் சூர்யாவுடன் ‘வணங்கான்’ படத்திலும் நடித்து வருகிறார்.

 இன்ஸ்டகிராம் தளத்தில் இளம் நடிகைகள் வெளியிடும் கவர்ச்சிப் படங்களுக்கு ‘லைக்’குகள் குவிந்து வருகின்றன. ராஷ்மிகா மந்தனா, பூஜா ஹெக்டே, சமந்தா, ரகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் வாரந்தோறும் புதுப் புகைப்படங்களை பதிவிடுகின்றனர்.

இந்நிலையில், ராஷ்மிகா மந்தனா வெளியிடும் படங்களைத்தான் அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள் விரும்பி ரசிப்பதாகத் தெரிய வந்துள்ளது.

அவரை 33.6 மில்லியன் பேர் இன்ஸ்டகிராமில் பின்தொடர் கின்றனர். அவர் ஒரு படத்தை வெளியிட்டால் அடுத்த சில மணி நேரங்களில் இரண்டு மில்லியன் ‘லைக்’குகளைப் பெற்றுவிடுவதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

 கைப்பேசியில் வரும் நம்பகமற்ற குறுந்தகவல்களைத் (எஸ்எம்எஸ்) திறக்கவேண்டாம் என்றும் அதில் உள்ள இணைப்பு களைப் பின்தொடர வேண்டாம் என்றும் பிரபல தொலைக்காட்சி நடிகை லட்சுமி வாசுதேவன் கூறியுள்ளார்.

அவ்வாறு செய்தால் தம்மைப் போல் பெரும் சிக்கலில் சிக்க நேரிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

“அண்மையில் அறிமுகம் இல்லாத ஒருவரிடம் இருந்து வந்த குறுந்தகவலைத் திறந்து பார்த்ததுடன், அதில் இருந்த இணைப்பையும் ‘கிளிக்’ செய்து விட்டேன்.

“இதன் மூலம் ஒரு கும்பல் எனது தனிப்பட்ட விவரங்கள், தொலைபேசி எண்கள் உள்ளிட்ட அனைத்தையும் பெற்றுவிட்டனர்.

“பின்னர் அவற்றை வைத்து, என்னிடம் பணம் கேட்டு மிரட்டியதுடன், கணினித் தொழில்நுட்பத்தை வைத்து எனது புகைப்படங் களை ஆபாசமானதாக மாற்றிவிட்டனர்.

மேலும் அந்த போலியான ஆபாசப்படங்களை எனக்குத் தெரிந்தவர்களுக்கும் பெற்றோருக்கும் அனுப்பி பெரும் வேதனைக்குள்ளாக்கி னர். எனவே, எச்சரிக்கை தேவை,” என்று லட்சுமி வாசுதேவன் தெரிவித்துள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!