'ஓர் அனுபவப் பயணம்'

'ஓர் அனுபவப் பயணம்'

1 mins read

எங்கு திரும்­பி­னா­லும், 'பொன்னி­யின் செல்­வன்' திரைப்­ப­டம் குறித்த பேச்­சாக இருக்­கிறது.

இந்­நி­லை­யில், இந்­தக் கதையை 'கல்கி' இத­ழில் தொட­ராக வெளி­யிட்ட கல்கி குழு­மம், தற்­போது குறும்­ப­டம் ஒன்­றைத் தயா­ரித்­துள்­ளது.

"பராக்... பராக்... கல்­கி­யின் பொன்­னி­யின் செல்­வன்... வந்­தி­யத் தேவன் பாதை­யில் ஓர் அனு­பவப் பய­ணம்" என்ற தலைப்பில் ஆவ­ணப்­ப­டம் ஒன்றை காணொ­ளித் தொகுப்­பு­க­ளாக உரு­வாக்கி உள்­ள­னர்.

16 பாகங்­க­ளாக யூடி­யூப் தளத்­தில் தொடர்ந்து 16 நாள்­க­ளுக்கு இந்­தக் காணொ­ளி­கள் வெளி­யாக உள்­ளன.

இந்நிலையில், சென்­னை­யில் நடை­பெற்ற விழா­வில் அமைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு கலந்து கொண்டு இந்த ஆவ­ணப்­படத்தை வெளி­யிட்­டார்.

நிகழ்ச்­சி­யில் பேசிய அமைச்சர், சாகா­வ­ரம் பெற்ற நாவல் 'பொன்னியின் செல்­வன்' என்­றும் 70 ஆண்­டு­க­ளைக் கடந்­துவிட்ட போதிலும்கூட லட்சக்கணக்கான வாச­கர்­கள் மனதில் இந்­தப் படைப்பு நிலைத்து நிற்­கிறது என்றும் புக­ழா­ரம் சூட்­டி­னார்.