தனுஷ் நடிக்கும் புதுப்படத்துக்கு 'கேப்டன் மில்லர்' எனப் பெயர் வைத்துள்ளனர். படத்துக்குப் பூசை போட்ட கையோடு வியாபாரம் சூடுபிடித்துள்ளதாம்.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இன்றுமுதல் தமிழகத்தின் தென்காசி பகுதியில் படப்பிடிப்பு தொடங்குகிறது.
முதன்முறையாக தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார் பிரியங்கா அருள் மோகன். மேலும், தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன், நிவேதா சதீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
இந்நிலையில், பூசை போட்ட கையோடு 'கேப்டன் மில்லர்' படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை அமேசான் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாம். எனவே திரையரங்க வெளியீட்டு உரிமை மிகப்பெரிய தொகைக்கு விலைபோகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ் நடித்துள்ள 'நானே வருவேன்', 'வாத்தி' ஆகிய திரைப்படங்கள் விரைவில் வெளியாக உள்ளன.
*** விஜய்யும் பிரபாசும் திரையில் மோத உள்ளனர். தற்போது வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தமிழில் 'வாரிசு' என்ற பெயரிலும் தெலுங்கில் 'வாரிசுடு' என்ற பெயரிலும் தயாராகி வருகிறது.
ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் இரண்டு பாடல்கள், முக்கிய சண்டைக் காட்சிகள் தவிர இதர காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டன. இந்நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பு நேற்று முன்தினம் தொடங்கி உள்ளது.
மேலும், அடுத்த ஆண்டு ஜனவரியில் பொங்கலுக்கு இப்படம் திரைக்கு வரும் என்று தயாரிப்பாளர் 'தில்' ராஜு அறிவித்திருந்தார்.
இந்நிலையில், பொங்கல் பண்டிகை வேளையில்தான் பிரபாஸ் நடித்து வரும் 'ஆதிபுருஷ்' படமும் திரைக்கு வருகிறது. அதனால் விஜய்யும் பிரபாசும் திரையில் நேருக்கு நேர் மோத உள்ளனர்.
*** மீண்டும் வித்தியாசமான கதையுடன் களமிறங்கி உள்ளார் இயக்குநர் ராஜூ முருகன். இம்முறை கார்த்தியுடன் இணைந்துள்ளார். படத்துக்கு 'ஜப்பான்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் அக்டோபர் 5ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என்றும் முதற்கட்ட பணிகள் முடிவடைந்திருப்பதால் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. தூத்துக்குடியில் முக்கியமான காட்சிகளை படமாக்க உள்ளனராம். முன்னணி ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், ஜி.வி.பிரகாஷ் ஆகியோரும் ராஜூ முருகனுடன் இணைந்துள்ளனர்.
*** விஜய்யின் 68வது படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்விக்கான பதில் இதுவரை வெளியாகவில்லை. ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு இயக்குநர்களின் பெயர்கள் அடிபடுகின்றன.
அந்த வகையில், விஜய்யை அடுத்து இயக்கப்போவது அட்லி எனக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே விஜய் நடிப்பில் 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' ஆகிய படங்களை இயக்கி உள்ளார் அட்லி. கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதிலும், மூன்று படங்களுமே வசூலில் சாதித்தவை.
தற்போது ஷாரூக் கான் நடித்து வரும் 'ஜவான்' படத்தை இயக்கி வருகிறார் அட்லி. இதில் விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்.
மேலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்த கையோடு அட்லியுடன் விஜய் கைகோப்பார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தமது பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடி உள்ளார் அட்லி. அந்நிகழ்வில் விஜய், ஷாரூக்கான் இருவரும் கலந்துகொண்டு அட்லியை வாழ்த்தினர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை தமது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அட்லி. மேலும் விஜய், ஷாரூக் கான் ஆகிய இருவரும்தான் தமது தூண்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
*** 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் வரை அதில் நடித்துள்ள கதாநாயகர்களான ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் உள்ளிட்டோர் தங்களது சம்பளத்தை உயர்த்துவ தில்லை என முடிவு செய்திருப்பதாகக் கூறப் படுகிறது. இம்முடிவை தயாரிப்பாளர்கள் வர வேற்றுள்ளனர்.
, :

