நள்ளிரவில் தாக்குதல்

நள்ளிரவில் தாக்குதல்

1 mins read

இரவு வேளை­யில் நடி­கர் விஷால் வீட்­டில் கற்­களை வீசித் தாக்­கு­தல் நடத்­தி­ய­வர்­கள் மீது நட­வ­டிக்கை எடுக்­கக் கோரி, அவ­ரது மேலா­ளர் காவல்­துறையில் புகார் அளித்­துள்­ளார்.

சென்­னை­யில் அண்ணா நகர் பகு­தி­யில் குடும்­பத்­து­டன் வசிக்கி­றார் விஷால். அண்­மை­யில் இரவு நேரத்­தில் இவ­ரது வீட்­டின் மீது சிலர் கற்­களை வீசி தாக்­கி­யுள்­ள­னர். இதில், வீட்­டின் கண்­ணாடி சேத­ம­டைந்­தது. கண்­கா­ணிப்பு கேம­ராக்­களை ஆய்வு செய்­த­தில், சிவப்பு நிற காரில் வந்த அடை­யா­ளம் தெரி­யாத இரு­வர் இத்­தாக்­கு­த­லில் ஈடு­பட்­டது தெரி­ய­வந்­தது.

இது குறித்து, விஷால் சார்பில் அவ­ரது மேலா­ளர் ஹரி­கி­ருஷ்ணன் என்­ப­வர் அண்ணா நகர் காவல் நிலை­யத்­தில் புகார் அளித்­தார்.

காவல்­து­றை­யி­னர் வழக்குப் பதிவு செய்து, மர்­ம ­ந­பர்­களை தேடி வரு­கின்­ற­னர். விஷால் படப்­பி­டிப்­பற்­காக வெளி­யூர் சென்­றுள்­ளார். அவர் தற்­போது 'லத்தி' உட்­பட மூன்று படங்­களில் நடித்து வரு­கி­றார். அவற்றுள் 'துப்பறி வாளன்' படத்தின் இரண்டாம் பாகத்தை அவரே தயாரிக்கவும் செய்கிறார்.