நவராத்திரி பண்டிகைக் காலத்தையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் தமிழ் மட்டுமல்லாமல் பல்வேறு மொழிப் படங்கள் வெளியீடு காண உள்ளன.
ஆயுதபூசைக்கு சில தினங்கள் முன்பாகவே வார இறுதி விடுமுறை நாள்களை முன்வைத்து, தமிழில் செப்டம்பர் 29ஆம் தேதி தனுஷ் நடித்துள்ள 'நானே வருவேன்' (படம்), செப்டம்பர் 30ஆம் தேதி மணிரத்னம் இயக்கியுள்ள சரித்திரப் படமான 'பொன்னியின் செல்வன்' படங்கள் வெளியாக உள்ளன.
தமிழில் இவ்விரு படங்கள் மட்டும்தான் போட்டியிட உள்ளன. இந்தியில் 'விக்ரம் வேதா' தமிழ்ப் படத்தின் மறுபதிப்பு வெளியாகி றது. தெலுங்கில் அக்டோபர் 5ஆம் தேதியன்று வெளியாக உள்ள படம் 'காட் ஃபாதர்'. சிரஞ்சீவி, நயன்தாரா நடித்துள்ள இந்தப் படத்தை மோகன் ராஜா இயக்கியுள்ளார்.
'பொன்னியின் செல்வன்', 'நானே வருவேன்' ஆகிய இரு படங்களுமே தெலுங் கில் வெளியாக உள்ளன. 'பொன்னியின் செல்வன்' படம் கூடுதலாக கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது.

