'பிரித்துப் பார்க்காதீர்கள்'

'பிரித்துப் பார்க்காதீர்கள்'

1 mins read
949d6ecb-ed0f-4122-b995-838b300935a8
-

இந்திய திரையுலகுக்கு இது ஓர் அற்புதமான நேரம் என்கிறார் முன்னாள் உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய்.

நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் பல்வேறு தரப்பட்ட பார்வையாளர்கள் திரைப்படங்களைப் பார்க்க விரும்புவதாக அண்மையில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.

மேலும், முன்பு போல் மொழிகளால் ஏற்பட்ட தடைகள் இப்போது இல்லை என்றும் கூறுகிறார்.

"திரைப்படங்கள், திரைப்படத் தொழில்களுக்கு இடையே உள்ள மொழித் தடைகள் இப்போது இல்லை, அவை உடைக்கப்பட்டுள்ளன. சினிமா கலைஞர்களையும் சினிமாவையும் பார்க்கும் வழக்கமான முறையிலிருந்து நாம் விலகிச் செல்ல வேண்டும்.

"அண்மையில் வெளியான 'ஆர்ஆர்ஆர்', 'புஷ்பா', 'கேஜிஎஃப் 2' போன்ற பல தென்னிந்தியப் படங்கள் அண்மைக் காலங்களில் இந்திய அளவில் வெற்றி பெற்றுள்ளன.

கடந்த சில மாதங்களாக இந்தி அல்லாத பல படங்கள் பெரிய அளவில் வசூல் கண்டுள்ளன. 'ஆர்ஆர்ஆர்' போன்ற படங்கள் தெலுங்கில் தயாரிக்கப்பட்டு, பிற மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன.

"நம் சினிமாவை தேசிய அளவில் மக்கள் அறிவார்கள். இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் உருவாகும் எல்லாப் படங்களையும் அனைவரும் பார்க்கலாம்.

"நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த ரசிகர்கள் இந்தியத் திரைப்படங்களை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே முன்பிருந்த மொழித் தடைகள் எல்லாம் இப்போது இல்லை," என்கிறார் ஐஸ்வர்யா ராய்.