தெலுங்கில் உருவாகி உள்ள 'ஷாகுந்தலம்' சரித்திரப் படம் நவம்பர் 4ஆம் தேதி வெளியாக உள்ளது.
தெலுங்கில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த குணசேகர் இயக்கி இருக்கும் இப்படத்தில், சகுந்தலை கதாபாத்திரத்தில் சமந்தாவும் மலையாள நடிகர் தேவ் மோகன் துஷ்யந்தன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கான விளம்பர சுற்றுப்பயணத்தை விரைவில் தொடங்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக சமூக ஊடகங்கள், பொது நிகழ்வுகளில் இருந்து ஒதுங்கி நிற்கிறார் சமந்தா. மேலும் சருமப் பிரச்சினைக்காக வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், 'ஷாகுந்தலம்' படத்துக்கான விளம்பர நிகழ்வு களில் பங்கேற்க சமந்தா சம்மதித்துள்ளாராம். மேலும் இந்தப் படத்திற்காக சமூக ஊடகங்களிலும் பதிவிட தொடங்கி உள்ளார்.
மீண்டும் கார்த்தியுடன் இணைந்து நடிக்கிறார் ராஷ்மிகா. 'ஜப்பான்' என்ற தலைப்பில் உருவாகும் இப்புதிய படத்துக்கான படப்பிடிப்பு சென்னை புறநகர்ப் பகுதியில் நடைபெற உள்ளது.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில், ராஷ்மிகா மீண்டும் கிராமத்துப் பெண் பாத்திரத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

