'சபரி' என்ற தலைப்பில் உருவாகும் புதுப்படத்தில் உணர்வுபூர்வமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் வரலட்சுமி சரத்குமார்.
அவரது நடிப்பு நன்கு மெருகேறி உள்ளது. இயக்குநரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நடிப்பதாகவும் பாராட்டி உள்ளார் இப்படத்தின் இயக்குநர் அனில் கட்ஸ்.
"இது மனோதத்துவம், திகில் அம்சங்களை உள்ளடக்கிய படம். கதையின் ஓட்டத்தில், ஒவ்வொரு கட்டத்திலும் பல்வேறு உணர்வு களை வெளிப்படுத்தி்ச் சிறப்பாக நடித்துள்ளார் வரலட்சுமி.
"ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் இப்படம் தயாராகிறது. திகில் காட்சிகள் ரசிகர்களை மிரள வைக்கும் என்பது உறுதி," என்கிறார் இயக்குநர் அனில் கட்ஸ்.

