சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய 170வது படத் திற்காக வாங்க உள்ள சம்பளம் குறித்த தகவல் ெளி யாகி சில விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. 'அண்ணாத்த' படத்திற்கு சுமார் ரூ.110 கோடி சம்பளம் வாங்கிய ரஜினி, 47 வருடங்களாக தன்னுடைய சம்பளத்தைக் குறைக்காமல் தொடர்ந்து ஏற்றிக்கொண்டே செல்கிறார் என்று சமூக ஊடகங்களில் சிலர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், அவர் 'டான்' படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில்
நடிக்க முடிவு செய்துள்ளாராம். இது ரஜினியின் 120வது படமாக உருவாகிறது.
மலையாள நடிகர் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கிறார் ஜோதிகா. தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் இப்படம் வெளியாகும். 2டி என்டெர் டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலம், தனது கணவர் சூர்யா வுடன் இணைந்து தரமான கதையம்சம் கொண்ட படங்களைத் தயாரித்து வருகிறார் ஜோதிகா. தனக்கேற்ற கதைகள் அமையும் போது நடிக்கவும் செய்கிறார். சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் சாய் பல்லவி நடித்து வெளியான 'கார்கி' திரைப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில், மலையாள முன்னணி நடிகர் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம் ஜோதிகா. மம்முட்டிக்கு தற்போது 71 வயதாகிறது.
தமக்குப் போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று வெளியான தகவல் உண்மையல்ல என்கிறார் ராய் லட்சுமி. கன்னடத்தில் 'ஜான்சி ஐபிஎஸ்', தெலுங்கில் 'ஆனந்த பைரவி', தமிழில் 'கேங்ஸ்டார் 21' உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருவதை சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். அண்மையில் மாலத்தீவு சென்றிருந்தபோது எடுக்கப்பட்ட பல்வேறு கவர்ச்சிப் படங்களை வெளியிட்டுள்ளார் ராய் லட்சுமி. அவற்றுள் கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள ஊஞ்சலில் அமர்ந்து அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்துக்கு நல்ல வரவேற்பாம்.
'பிக்பாஸ்' நிகழ்ச்சியை இந்தியில் தொகுத்து வழங்க தமக்கு ஆயிரம் கோடி ரூபாய் ஊதியம் கொடுக்கப்பட்டதாக வெளியான தகவலை மறுத்துள்ளார் சல்மான் கான்.

