பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீயின் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மீட்டெடுத்து அவரிடம் ஒப்படைத்துள்ளது தமிழக அரசு. இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
போலி பத்திரப்பதிவு மூலம் வேறொருவர் வாணிஸ்ரீயின் நிலத்தை முன்பு அபகரித்துக் கொண்டார்.
தமிழில் 'வசந்த மாளிகை', 'வாணி ராணி' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் வாணிஸ்ரீ. தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் நடித்து, ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்.
இவருக்குச் சொந்தமான சுமார் இரண்டாயிரம் சதுர அடி நிலத்தை ஒருவர் போலி ஆவணங்கள் மூலம் பறித்துக்கொண்டதாகப் புகார் எழுந்தது.
அது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் புதிய நடைமுறையை அமல்படுத்தி உள்ளது தமிழக அரசு.
அதன் மூலம் வாணிஸ்ரீயின் நிலம் மீட்கப்பட்டுள்ளது.

