காய்ச்சலுடன் நடித்த நாயகி

ஒரு படத்­தில் இரண்டு நாய­கி­கள் நடித்­தாலே சில சிக்­கல்­கள் எழும் என்­பார்­கள். ஆனால் அசோக் செல்­வனோ, 'நித்­தம் ஒரு வானம்' படத்­தில் ஐந்து நாய­கி­க­ளு­டன் நடித்­துள்ளார்.

அறி­முக இயக்­கு­நர் ஆர்.கார்த்­திக் கைவண்­ணத்­தில் உரு­வா­கும் இந்­தப் படத்­தில் ரீது வர்மா, அபர்ணா பால­மு­ரளி, சிவாத்­மிகா ராஜ­சே­கர் என மூன்று நாய­கி­கள் படம் முழு­வ­தும் வந்து போவார்­க­ளாம்.

நான்­கா­வது, ஐந்தாவது நாயகிகள் யார் என்­ப­து­தானே உங்­கள் கேள்வி. நான்காவது நாயகி நடிகை ஷிவதா.

"கதைப்­படி மூன்று நாய­கி­கள் தேவைப்­பட்­ட­னர். அதற்­காக முப்­பது நாய­கி­களை நேரில் சந்­தித்து கதையை விவ­ரித்­தி­ருக்­கி­றேன். எல்­லா­ருமே கதை பிடித்­தி­ருப்­ப­தா­கச் சொன்­னா­லும், கால்­ஷீட் உள்ளிட்ட பிரச்­சி­னை­கள் கார­ண­மாக நடிக்க முடி­ய­வில்லை என்று கைவிரித்­து­விட்­ட­னர். அதன் பிற­கு­தான் மூன்று பேரை ஒப்­பந்­தம் செய்ய முடிந்­தது.

"என் கதை­யின் இன்னொரு நாயகி என்­றால் அது இயற்கைதான். படம் தொடங்­கும்­போதே 'இயற்­கைக்கு நன்றி' என்­கிற வாச­கம்­தான் முத­லில் இடம்­பெ­றும். நாம் இயற்­கையை நம்­பி­னால் என்ன மாதிரி­யான மாய வித்­தை­கள் நடக்­கும் என்று யோசித்­துப் பார்த்­தேன்.

"மழை வர வேண்­டும் என்று நினைத்­தால் மழை, பனி என்­றால் கொட்­டும் பனி என்று எல்­லாமே என் எதிர்­பார்ப்­பு­க­ளுக்கு ஏற்­பத்­தான் நடந்­தன. முத­லில் குறிப்­பிட்ட மூவரைத் தவிர, நான்­கா­வ­தாக ஷிவ­தா­வைக் குறிப்­பிட வேண்­டும்.

"ஒரு பாடல் காட்­சிக்­காக தொடர்ந்து நான்கு மணி நேரம் கொட்­டும் மழை­யில் அச­ரா­மல் பாடி, ஆடி நடித்­தார். ஒரு கதா­நாயகி இந்த அள­வுக்கு தொழில் பக்­தி­யு­டன் இருப்­பார் என எதிர்­பார்க்­கவே இல்லை. அவ்­வ­ளவு ஏன்... ஓரிரு நிமி­டங்­கள் ஓய்­வெடுக்க கேர­வன் வாகனத்­தைக்­கூட அவர் பயன்­ப­டுத்­த­வில்லை," என்­கி­றார் இயக்­கு­நர் கார்த்திக்.

இவ்­வ­ளவு கதா­நா­ய­கி­கள் இருந்­தும் தன் படத்­தில் ஒரு முத்­தக்­காட்சி­கூட இருக்­காது என்று சொல்லி கண்­சி­மிட்டு­பவர், நாய­க­னின் கதா­பாத்­தி­ரம் மிக சுவா­ர­சி­ய­மாக அமைக்­கப்­பட்­டுள்­ளது என்­கி­றார்.

"கதைப்­படி என் கதா­நா­ய­கன் தன்­னைச் சுற்றி எத்­தனை பேர் இருந்­தா­லும் ஏதோ ஒரு வகை­யிலே தனிமை விரும்­பி­யா­கவே இருப்­பான். ஐந்து நிமி­டங்­க­ளுக்கு ஒரு­முறை அவ­னது மன­நிலை மாறிக்­கொண்டே இருக்­கும். ஒரு­வித மன அழுத்­தத்­து­ட­னேயே வலம் வரு­ப­வன், நண்­பர்­க­ளி­டம் இருந்து ஒரு தொலை­பேசி அழைப்பு வந்­த­தும் அடி­யோடு மாறிப்போவான்.

"பொது­வாக இது­தான் மனித இயல்பு. தன்­னிடம் காணப்­படும் சில மாற்­றங்­களை, தனது குணா­தி­ச­யத்தை நாய­கன் எப்­படிச் சாத­க­மாக மாற்­றிக்கொள்­கி­றான் என்­ப­து­தான் இந்­தப் படத்தின் கதைக்­கரு. தமி­ழி­லும் தெலுங்­கி­லும் ஆறு படங்­களில் உதவி இயக்­கு­ந­ரா­கப் பணி­யாற்­றிய அனு­ப­வம் உள்­ளது. அந்தத் துணிச்­சலில் நான் எழு­திய கதையை அசோக் செல்வனி­டம் விவ­ரித்தேன். அவ­ருக்­குப் பிடித்துப்போன­தால் இன்று இயக்­கு­ந­ராக பணி­யாற்­றிக்கொண்­டி­ருக்­கி­றேன்," என்­கி­றார் ஆர்.கார்த்­திக்.

அப்பாவியான, எதற்கெடுத்தாலும் ரகளை செய்யும் கதாபாத்திரத்தில் தேசிய விருது பெற்றுள்ள அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். இன்றைய நவநாகரிக பெண்ணாக ரீது வர்மாவும் அண்டை வீட்டுப்பெண் போன்ற பாத்திரத்தில் சிவாத்மிகா ராஜசேகரும் நடித்துள்ளனர்.

"அபர்ணா பத்து நாள்கள்தான் கால்ஷீட் கொடுத்திருந்தார். ஆனால், எட்டு நாள்களிலேயே தனக்கான அனைத்து காட்சிகளிலும் நடித்து முடித்துவிட்டார்.

"இடையில் ஒரு நாள் அவருக்கு கடும் காய்ச்சல். இருந்தாலும், படப்பிடிப்பு பாதிக்கப் படக்கூடாது என்பதற்காக காய்ச்சலைப் பொறுத்துக்கொண்டு அவர் நடித்தார்.

"ஒப்பனையாளர் என்னிடம் வந்து, அபர்ணாவின் முகம் காய்ச்சலால் சுடு கிறது என்று பதற்றத்துடன் சொன்னார். ஆனால் அபர்ணாவோ கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் தனக்கான காட்சிகளை முடித்த பிறகே கிளம்பிச் சென்றார். இப்படித்தான் மற்றவர்களும் நன்கு ஒத்துழைத்தனர்," என்கிறார் இயக்குநர் கார்த்திக்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!