'பொன்னியின் செல்வன்' படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி 'பூங்குழலி' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், இந்த கதாபாத்திரம் அனைத்து இளைஞர்களின் மனதையும் கவர்ந்தது என்றே சொல்ல வேண்டும்.
இவர் அண்மையில் நடிகர் ஆர்யாவுடன் இணைந்து நடித்திருந்த படம் 'கேப்டன்'. இயக்குநர் சக்தி சவுந்தர்ராஜன் கூட்டணியில் வெளியானது இத்திரைப்படம்.
இந்த திரைப்படம் பெரிய வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் தற்போது திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் இவர் பூங்குழலியாக படகோட்டும் பெண்ணாக நடித்திருந்தது இவருக்கு நல்ல வரவேற்பைக் கொடுத்துள்ளது.
தற்போது, இவர் சேலை அணிந்துகொண்டு படப்பிடிப்பு நடத்தி, அந்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். பட்டுப் புடவையில் அவர் அழகாக இருப்பதாக ரசிகர்கள் வர்ணித்து வருகிறார்கள்.