இந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுப் போட்டியில் 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் பங்கேற்க உள்ளது.
சிறந்த வெளிநாட்டுத் திரைப் படங்களுக்கான பிரிவில் இந்தியா சார்பாக அதிகாரபூர்வமாக 'ஆர்ஆர்ஆர்' படம் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குஜராத்தி படமான 'செல்லோ ஷோ' தேர்வு செய்யப்பட்டது. இதனால் ராஜமௌலி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில் விருதுக்கான பொதுப் பிரிவுகளிலும் வெளிநாட்டுப் படங்கள் நேரடியாக கலந்துகொள்ள முடியும் என்பதால் அந்த வாய்ப்பை 'ஆர்ஆர்ஆர்' படத் தயாரிப்புத் தரப்பு பயன்படுத்திக் கொண்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.