பொன்னியின் செல்வன்: 400 கோடி ரூபாய் வசூல்

1 mins read
9b8d5422-558f-4cb5-8981-658a65546fbf
பொன்னியின் செல்லவன் திரைப்படத்திலிருந்து ஒரு காட்சி -

பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகெங்கும் 400 கோடி ரூபாய் வசூலைக் குவித்துள்ளது. அமெரிக்காவில் ஆக அதிக வசூலை திரட்டியுள்ள தழிழ்ப்படம் பொன்னியின் செல்வன். முன்னதாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 அந்த இடத்தில் இருந்தது. அமெரிக்காவில் மட்டும் திரைப்படம் 5.54 மில்லியன் டாலரை வசூலித்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் ரஜினி நடிக்காத திரைப்படம் ஒன்று அமெரிக்காவில் இந்தச் சாதனையைப் புரிந்திருப்பது இதுவே முதன்முறை எனக் கூறப்பட்டது. 2.0 திரைப்படம் 5.509 மில்லியன் டாலரை வசூலித்தது.

தமிழ்நாட்டில் கடந்த வாரயிறுதி மட்டும் திரைப்படம் 150 கோடி ரூபாய் வசூலித்தது.