ரசிகர்கள் கேலி: இலியானா கோபம்

ரசிகர்கள் கேலி: இலியானா கோபம்

1 mins read
a25fe5c1-6097-4974-9ce3-43e971551f21
-

சமூக ஊட­கங்­க­ளின் மூலம் சிலர் நடி­கை­க­ளைக் கிண்­டல் செய்­வ­தைக் கண்­டிக்க வேண்­டும் என நடிகை இலி­யானா வலி­யு­றுத்தி உள்­ளார்.

மீண்­டும் தெலுங்கு படங்­களில் கவ­னம் செலுத்த தொடங்கியுள்ள அவர், கடு­ம் உடற்­ப­யிற்சி மூலம் உடல் எடை­யை­க் குறைத்­துள்­ளார்.

அண்­மை­யில் கடற்­க­ரை­யில் எடுக்­கப்­பட்ட தமது கவர்ச்­சிப் படங்­களை அவர் சமூக ஊட­கங்­களில் பகிர்ந்த நிலை­யில், சிலர் அவரை உரு­வக்­கேலி செய்­த­னர். மேலும், வாய்ப்பு இல்லாததால் இவ்வாறு கவர்ச்சி காட்டி படங்களில் நடிக்க முயற்சி செய்வதாகவும் கூறியுள்ளனர்.