விஜய்யின் 67வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சூர்யாவிடம் படக்குழுவினர் பேசி வருவதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
'மாஸ்டர்' படத்துக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் விஜய். இதில் அவர் ஐம்பது வயதைக் கடந்தவராக நடிக்க உள்ளதாகத் தகவல்.
திரிஷா, கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் நாயகிகளாக நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் இந்தி நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிப்பார் என்று கூறப்படுகிறது.
விஜய்யும் சூர்யாவும் ஏற்கெனவே 'ஃபிரெண்ட்ஸ்' படத்தில் இணைந்து நடித்துள்ளனர். கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் இறுதிக்காட்சியில் 'ரோலக்ஸ்' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சூர்யா. ஐந்து நிமிடங்கள் மட்டுமே இடம்பெறக் கூடிய 'ரோலக்ஸ்' கதாபாத்திரத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை அள்ளியிருந்தார்.
இத்தகைய கதாபாத்திரத்தில் நடிக்கத்தான் விஜய்யின் படக்குழு சூர்யாவை அணுகி உள்ளதாம்.

