கிரிக்கெட் வீரர் நடராஜன் வாழ்க்கைக் கதையில் சிவா

1 mins read
c37a5358-eb9a-44c6-8239-8f42a0dfe3dd
நடராஜன் (இடது), சிவகார்த்திகேயன். -

இந்திய கிரிக்­கெட் வீரர் நட­ரா­ஜ­னின் வாழ்க்­கையை மைய­மாக வைத்து உரு­வா­கும் படத்­தில் சிவ­கார்த்­தி­கே­யன் நாய­க­னாக நடிக்க இருப்பதாகத் தக­வல் வெளி­யாகி உள்­ளது. தமது சொந்த படத்­த­யா­ரிப்பு நிறு­வ­னத்­தின் மூலம் 'கனா' படத்­தைத் தயா­ரித்­தி­ருந்­தார் சிவ­கார்த்­தி­கே­யன்.

கிரா­மத்து இளம் பெண், இந்­திய பெண்­கள் கிரிக்­கெட் அணி­யில் இடம்­பெற்று சாதிப்­ப­து­தான் இப்­ப­டத்­தின் கதை. ஐஸ்­வர்யா ராஜேஷ் நாய­கி­யாக நடித்­தி­ருந்­தார்.

சேலம் அருகே உள்ள சின்­னப்­பம்­பட்டி எனும் கிரா­மத்­தைச் சேர்ந்த நட­ரா­ஜன், தமிழ்­நாடு பிரீ­மி­யர் லீக், இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) போட்­டி­களில் சிறப்­பான ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்­திப் பாராட்டு பெற்­ற­து­டன், இந்­திய அணி­யி­லும் இடம்­பெற்று சாதித்­தார்.

நட­ரா­ஜன் ஆட்­டத்தை சிவ­கார்த்தி­கே­யன் ஏற்­கெ­னவே பாராட்டி உள்­ளார். எனவே, அவ­ரது வாழ்க்­கைக் கதை­யில் சிவா நடிப்­பார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

அருண்­ராஜா காம­ராஜ் இயக்­கிய 'கனா' படத்­தில் அவர் கிரிக்­கெட் பயிற்­சி­யா­ள­ராக நடித்­தி­ருந்­தார். ஏற்­கெ­னவே இந்­திய கிரிக்­கெட் வீரர்­கள் சச்­சின் டெண்­டுல்­கர், டோனி ஆகி­யோ­ரின் வாழ்க்­கையை மைய­மாக வைத்து படங்­கள் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளன.