தமிழ், தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ், தனது தோழியுடன் சேர்ந்து காற்சட்டையுடன் கைலி அணிந்து ஆண்களைப் போலவே குத்தாட்டம் போட்டு அதனை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இதனைப் பலரும் பாராட்டி, கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
சமூகவலைத்தளங்களில், குறிப்பாக இன்ஸ்டகிராம் பக்கத்தில் நாளும் துடிப்பாகச் செயல்பட்டு வரும் கீர்த்தி சுரேஷை ஏறத்தாழ 17 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், தெலுங்கு நடிகர் நானியுடன் கீர்த்தி நடித்த 'தசரா' படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் பாடல் ஒன்று அண்மையில் வெளியானது.
'தூம் தாம்' என்று தொடங்கும் பாடலுக்குத் தனது தோழியுடன் சேர்ந்து அவர் லுங்கி நடனம் ஆடியுள்ளார்.
சமுத்திரக் கனி, மீரா ஜாஸ்மின், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் 'தசரா' படத்தில் நடித்துள்ளனர். 'மாமன்னன்', 'போலோ சங்கர்' உட்பட நான்கு படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

