தமிழில் அறிமுகமாகும் தேசிய விருது பெற்ற பாடகி நஞ்சம்மா

தமிழில் அறிமுகமாகும் தேசிய விருது பெற்ற பாடகி நஞ்சம்மா

1 mins read
324acfed-76c6-4bb9-9f7f-a8029414032b
-

'அய்­யப்­ப­னும் கோஷி­யும்' மலையாளப் படத்­தில் பாடி­ய­தற்­காக சிறந்த பின்ன­ணிப் பாட­கிக்­கான தேசிய விருதை அண்­மை­யில் அதி­பர் திரெளபதி முர்­மு­வி­டம் இருந்து பெற்ற நஞ்­சம்மா (படம்), இப்­போது தமி­ழி­லும் பாடு­வ­தற்­காக அறி­மு­க­மா­கி­யுள்­ளார்.

'ஆதாம்' என்ற மலை­யா­ளப் படத்தை இயக்­கிய சமர், 'சீன் நம்­பர் 62' என்ற படத்தை தமி­ழில் இயக்க உள்­ளார். இப்­ப­டத்­தில் 'என் சேவல்' என்ற பாடலைப் பாட­கர் வேல்­மு­ரு­க­னு­டன் இணைந்து நஞ்­சம்மா பாடி­யுள்­ளார். இப்பாடல் சமூக வலைத்­த­ளங்களில் வெளி­யாகி ரசிகர்­க­ளை ஈர்த்து வரு­கிறது.

கேரள மாநி­லம், அட்­டப்­பாடி மலைக்­கி­ரா­மத்­தைச் சேர்ந்­த­வர் நஞ்­சம்மா. பழங்­குடி இனத்­தைச் சேர்ந்­த­ வ­ரான இவர், கிரா­மி­யப் பாடல்­கள் பாடு­வ­தில் வல்­ல­வர்.

இதை­ய­றிந்த கலை உல­கி­னர் கடந்த 2020ல் 'அய்­யப்­ப­னும் கோஷி­யும்' படத்­தில் 'களக்­காத்த சந்­த­ன­மே­ரம் வெகுவாகப் பூத்­தி­ருக்­கு' என்ற பாட­லைப் பாட நஞ்­சம்மாவிற்கு வாய்ப்­ப­ளித்­த­னர். இது பட்டி, தொட்டி எங்­கும் ஒலித்­ததை அடுத்து, அவ ருக்குத் தேசிய விருது கிடைத்­தது.