'நினைவுகளை அசைபோடுவேன்'

'நினைவுகளை அசைபோடுவேன்'

1 mins read
0ff7dc38-9fa6-4e99-b201-d59522b21e61
-

செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றியவர் பெரம்பலூரைச் சேர்ந்த திவ்யா துரைசாமி. 'எதற்கும் துணிந்தவன்' படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகி உள்ளார். ஆனால், இந்தப் படத்திற்கு முன்பே இவர் 'சஞ்சீவன்' படத்தில் நாயகியாக நடித்து வந்துள்ளார். ஆனால், இப்போதுதான் திரையரங்குகளில் 'சஞ்சீவன்' திரையிடப்பட்டு வருகிறது.

வினோத் லோகிதாஸ், திவ்யா துரைசாமி நடித்திருக்கும் 'சஞ்சீவன்' படத்தை மணிசேகர் இயக்கியிருக்கிறார். ஸ்னூக்கர் விளையாட்டில் வெற்றிபெறும் நாயகன், நண்பர்களுடன் ஏற்காடு செல்லும்போது நடக்கும் சம்பவங்கள்தான் கதை என்றும் இயக்குநர் மணிசேகர் தெரிவித்திருந்தார்.

"செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றியபோது, படத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது. பாண்டிய ராஜ் படம், சன் பிக்சர்ஸ் புரொடெக்சன் நிறுவனத்தின் படம் என்று சொன்னால் யாருக்குத்தான் சினிமாவில் நடிக்கும் ஆசை இருக்காது? 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் அனைவருடனும் எனக்கு தனித்தனி காட்சிகள் இருக்கும். இருப்பினும், பாதி படத்திற்குப் பிறகு காட்சிகளில் அனைவரும் இருந்தாலும் என்னை மட்டுமே எல்லாரும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். நடுவில் நின்றுகொண்டு நான் மட்டும் தொடர்ந்து கதை சொல்லிக் கொண்டு இருப்பேன். பதற்றமாக இருந்தது. அது மறக்கமுடியாத நினைவாகிவிட்டது. அவ்வப்போது என் மனதில் இது நிழலாடிச் செல்லும்," என்று திவ்யா கூறியுள்ளார்.

திவ்யா

துரைசாமி