உலக அளவில் மிக அழகான பெண்களின் பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்திய நடிகை என்ற
பெருமை தீபிகா படுகோனுக்கு கிடைத்துள் ளது. 29 வயதான ஜோடி மோகர் இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இவருடைய கண்கள், உதடுகள், கன்னம், ஒட்டுமொத்த முக அமைப்பு என எல்லாமே மிகக் கச்சிதமாக உள்ளன என்கிறது பட்டியலை வெளியிட்ட அமைப்பு. இந்நிலையில்
சுமார் 91 விழுக்காடு மதிப்பெண் பெற்று இந்தப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளார் தீபிகா படுகோன். இவரது புருவம் மிக அழகானது என்றும் உலக அளவில் இதுபோன்ற அமைப்புள்ள பெண்கள் இருப்பது அரிது என்றும் கூறுகின்றனர்.
'பீஸ்ட்' பட நாயகி பூஜா ஹெக்டேவின் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை 111 பசுக்களுக்கு உணவளித்துக் கொண்டாடி உள்ளனர். தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த அந்த ரசிகர்கள் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு அன்ன தானமும் வழங்கி பாராட்டு பெற்றுள்ளனர். இத்தகவல் பூஜாவின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டபோது
நெகிழ்ந்து போனாராம். "எனது பிறந்தநாளை பயனுள்ள வகையில் கொண்டாடியதற்கு நன்றி. என்னை மிகவும் பெருமைப்படும்படி செய்து விட்டீர்கள்," என்று டுவிட்டர் பதிவு மூலம் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் பூஜா.
மேலும் 'பீஸ்ட்' படத்தில் நடித்த பிறகு இவரை சமூக ஊடகங்களில் பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாம். அதனால் தமிழில் கூடுதல் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார்.
குறிப்பாக, மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளதாகத் தகவல்.
சென்னையில் சத்யா என்ற கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த கொலையாளிக்கு உடனடியாக தண்டனை வழங்கப்பட வேண்டும் என நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி வலியுறுத்தி உள்ளார்.
சட்டப்படி விசாரிப்பதாகக் கூறிக்கொண்டு, பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தண்டிக்கும் நடைமுறையைப் பின்பற்றக்கூடாது என்று குறிப்பிட்டுள்ள அவர், உடனடி விசாரணையை நடத்த வேண்டும் என இந்த வழக்கை விசாரிக்கப் போகும் நீதிபதிக்கு தாம் வேண்டுகோள் விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். இக்கருத்துக்கு ரசிகர்கள் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இளம் வயது திரிஷாவாக '96' படத்தில் நடித்து தமிழ் ரசிகர் களின் கவனம் ஈர்த்தவர் கவுரி கிஷன். அதன் பிறகு பல்வேறு குணச்சித்திர கதாபாத்திரங் களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், மலையாளத்தில் உருவாகியுள்ள 'லிட்டில் மிஸ் ராவுத்தர்' என்ற படத்தில் முதன்முறையாக கதாநாயகியாக நடித்துள்ளார் கவுரி கிஷன். இந்தப் படத்தை விஷ்ணு தேவ் இயக்கியுள்ளார்.
விரைவில் திரை காண உள்ள நிலையில், இப்படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டியை வெளியிட்டுள்ளனர்.
படத்தில் ஐந்து பாடல்கள் இடம்பெற்றுள்ளனவாம். '96' படத்துக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தாதான் இசையமைத்துள்ளார்.
அதனால் பாடல்கள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

