திரைத் துளிகள்

 சத்தமில்லாமல் நான்கு தமிழ்ப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் பிரியா பவானி சங்கர். இவை தவிர அடுத்த ஆண்டு இறுதிவரை ஏழு படங்களில் நடிக்க கால்ஷீட் ஒதுக்கி உள்ளார். இந்நிலையில், முதன்முறையாக தெலுங்குப் படத்திலும் பிரியாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். ஈஸ்வர் கார்த்திக் இயக்கும் இந்தப் படத்தில் சத்யதேவ், டாலி தனஞ்செயா இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். இதில் முதன்மை நாயகியாக பிரியா நடிக்க, மேலும் இரு நாயகிகளும் உள்ளனராம். தமிழில் தரமான படைப்புகள், நல்ல கதா பாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்து வரும் நிலையில், தெலுங்கிலும் இதே கொள்கையைப் பின்பற்றுவது என முடிவு செய்துள்ளார் பிரியா.

 எந்தவிதமான பட்டப் பெயரும் தமக்கு வேண்டாம் என்ற முடிவில் தீர்மானமாக உள்ளார் தனுஷ். தமது ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் இவ்விஷயத்தில் தம்மிடம் மனமாற்றத்தை எதிர்பார்க்க வேண்டாம் என்றும் திட்ட வட்டமாகக் கூறிவிட்டார்.

"பல்வேறு சூழல்களில் இதுகுறித்து திரையுலக முன்னணிப் பிரமுகர்கள் சிலர் வலியுறுத்திய போதும் தனுஷ் தன் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவரை 'இளம் சூப்பர் ஸ்டார்' என்று சிலர் குறிப்பிட்டபோது, உடனடியாகக் கையெடுத்து கும்பிட்டு 'இந்த அடைமொழியே வேண்டாம்' என்று மறுத்தார்," என்கிறார்கள் தனுஷை நன்கு அறிந்தவர்கள். தனுஷைப் போன்றே சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், விக்ரம் பிரபு, விஷ்ணு விஷால், அதர்வா, விமல், ஜெய் உள்ளிட்ட பலரும் தங்களுக்கு எந்தவிதமான பட்டப்பெயரும் வேண்டாம் என்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறார்கள்.

 முகத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார் நடிகை ஷ்ருதி ஹாசன். முக

அழகை கூட்டுவதற்காக அவருக்கு இந்த சிகிச்சை அளிக்கப்பட்டதாக அண்மைய ஊடகத் தகவல்கள் தெரிவித்தன. இதுகுறித்து தற்போது அவரே விளக்கம் அளித்துள்ளார். ஒருமுறை படப்பிடிப்பின்போது ஷ்ருதி முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக மருத்துவ ஆலோசனை பெற்றார். காயத்தின் தன்மையைப் பார்த்த மருத்துவர்கள், சிறிய அளவில் அறுவை சிகிச்சை செய்தால் மூக்கு மேலும் அழகாகத் தோற்றமளிக்கும் காயமும் ஆறிவிடும் என்று ஆலோசனை வழங்கியதாகத் தகவல். "எனவேதான் அறுவை சிகிச்சைக்கு சம்மதித்தேன். இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை," என்கிறார் ஷ்ருதி ஹாசன். தற்போது தமிழில் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையாவிட்டாலும், ஷ்ருதிக்கு தெலுங்கில் கைவசம் இரண்டு படங்கள் உள்ளன.

 சில கதாநாயகர்கள் தங்களுடைய படங்கள் சரியாக ஓடாவிட்டாலும் சம்பளத்தை உயர்த்துவதற்கு தயங்குவதே இல்லை என்றும் தயாரிப்பாளர்களின் சிரமங்களைக் கண்டு கொள்வதில்லை என்றும் கூறப்படுவதுண்டு. அந்தப் பட்டியலில் ஆர்யாவும் இணைந்துள்ளார். 'சார்பட்டா' படத்துக்குப் பிறகு மீண்டும் சில பட வாய்ப்புகள் அவரைத் தேடி வருகின்றன. அந்த வகையில் 'எனிமி', 'கேப்டன்' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். ஆனால் இரண்டுமே வசூல் ரீதியில் சாதிக்கவில்லை. இந்நிலையில், தனது சம்பளத்தை ஒரேயடியாக உயர்த்தி உள்ளாராம். இதுவரை ஐந்து கோடி ரூபாய் கொடுத்தாலே போதும் என்று தன்மையாகப் பேசியவர், இப்போது தனது இரு கைகளிலும் உள்ள பத்து விரல்களையும் விரித்துக் காட்டுகிறாராம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!