ஏழு ஆண்டுகளுக்கு முன்பே வெளியீடு கண்டிருக்க வேண்டிய படம் 'இடம் பொருள் ஏவல்'. சீனு ராமசாமி இயக்கி உள்ளார்.
திட்டமிட்டபடியே படத்தை முடித்துவிட்டார் சீனு. ஆனால் பண விவகாரத்தால் உரிய நேரத்தில் திரைகாணவில்லை.
இத்தனைக்கும் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா போன்ற தரமான கலைஞர்கள் பங்களித்துள்ள படம். யுவன் சங்கர் இசையமைத்துள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். எனினும் அச்சமயம் இப்படத்தைத் தயாரித்த திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சில நிதிப் பிரச்சினையால் முடங்கியது. அதனால் இப்படத்தின் வெளியீட்டை தள்ளிப்போட்டனர்.
அதன் பிறகும் நல்ல வழி பிறக்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு முயற்சி மேற்கொண்டபோது கொரோனா தொற்றுப் பரவல்
முட்டுக்கட்டை போட்டது. அதை
யடுத்து ஓடிடி தளத்தில் வெளியாகும் என்ற ஒரு பேச்சும் எழுந்தது.
இன்று விஜய் சேதுபதிக்கும் விஷ்ணு விஷாலுக்கும் நல்ல சந்தை மதிப்பு உள்ளதால், 'இடம் பொருள் ஏவல்' குறித்து மீண்டும் பேசப்படுகிறது. படத்தை வெளியிடுவதற்கு தன்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறாராம் இயக்குநர் சீனு ராமசாமி.

