ஆஸ்கர் விருதைக் குறிவைத்து 'ஆர்ஆர்ஆர்' படத்தை அமெரிக்காவில் விளம்பரப்படுத்துவதற்கான முயற்சியில் அப்படத்தின் தயாரிப்புத்தரப்பு ஈடுபட்டுள்ளது.
அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இப்படத்தின் சிறப்புக் காட்சிகள் திரையிடப்படுகின்றன. பட வெளியீட்டின்போது வழக்கமான முறையில் விளம்
பரப்படுத்தப்பட்டாலும் இப்போது அமெரிக்க மக்களைக் கவரும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவாம்.
இதற்காக ரூ.50 கோடி செல விட உள்ளதாகவும் மொத்தச் செலவையும் படத்தின் இயக்குநர் ராஜமௌலியே ஏற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இப்படத்துக்காக அவர் 300 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக தகவல் வெளியானபோது ரசிகர்கள் ஆச்சரியத்தில் வாய்பிளந்தனர். இந்தப் புதிய தகவலும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. வெளிநாடுகளில் 'ஆர்ஆர்ஆர்' படத்தை விளம்பரப்படுத்துவது மூலம் அவர் ஆஸ்கர் விருதை குறிவைத்திருப்பதாகவும் விருது கிடைக்காவிட்டால் உலகத் திரைச்சந்தையில் தனது மதிப்பேனும் உயரும் எனக் கணக்கிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம்பெறும் காட்சி.