நயன்தாராவை தொடர்ந்து ஹன்சிகா வீட்டிலும் மிக விரைவில் கெட்டிமேளச் சத்தம் கேட்கப் போவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரண்மனை ஒன்றில் திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஹன்சிகாவின் சகோதரருக்கும் இதே இடத்தில்தான் விமரிசையாகத் திருமணம் நடைபெற்றது.
ஹன்சிகாவின் திருமணம் அநேகமாக வரும் டிசம்பர் மாதம் நடைபெற இருப்பதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
மணமகன் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் என்று் இரு வீட்டாரும் திருமணத்துக்கு சம்மதித்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி ஐம்பது படங்களில் நடித்து முடித்துள்ளார் ஹன்சிகா. அண்மையில்தான் அவரது ஐம்பதாவது படமான 'மஹா' வெளியானது.

