திரைத் துளி­கள்

திரைத் துளி­கள்

2 mins read
0d7b0087-370c-4a6d-a5db-d92544384818
-
multi-img1 of 3

 உடல்நலம் பாதிக்கப் படும்போது அதுகுறித்து வெளியே சொல்ல தயங்கக்கூடாது என்றும் அவ்வாறு சொல்வது அவமானத்துக்குரிய செயல் எனக் கருத வேண்டாம் என்றும் கூறுகிறார் நடிகை டாப்சி.

அண்மையில் 'வெரிகோஸ் வெயின்ஸ்' எனும் நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புக்காக தாம் சிகிச்சை பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

"உடல்நலக் குறைவு என்பது சாதாரண விஷயம். இதை வெளியே சொல்வது அவமானம் என்று நினைத்தால் நமது உடல்நலம் நமது கையை விட்டுச் சென்றுவிடும். வயது வந்த மகள்களுக்கு பெற்றோர் இந்த விஷயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். எத்தகைய உடல்நலப் பிரச்சினையாக இருந்தாலும் பெண்கள் தங்கள் பெற்றோர் அல்லது கணவருடன் தயக்கம் இல்லாமல் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதில் வெட்கப்பட ஒன்றும் இல்லை," என்பதே டாப்சியின் அறிவுரை.

 தனுஷ் தான் தமக்கு மிகவும் பிடித்தமான நடிகர் என்கிறார் இளம் நாயகி பிரியா வாரியர். வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத அளவுக்கு தனுஷ் மீது தமக்குப் பிரியம் உள்ளது என்று சமூக

ஊடகப் பதிவில் அவர் வெளிப்படையாகப் பதிவிட்டுள்ளார்.

"தனுஷ் மீது வைத்துள்ள அன்பை வைத்து என்னை 'தனுஷ் பைத்தியம்' என்றும்கூட சொல்லலாம். அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாக மனதில் உள்ளது. என் ஆசை விரைவிலேயே நிறைவேறும் என எதிர்பார்க்கிறேன்," என்கிறார் பிரியா வாரியர்.

 கடந்த எட்டு ஆண்டுகளாக தமது திரையுலகப் பயணம் சிக்கலின்றி நல்லவிதமாக அமைந்துள்ளது என்கிறார் இளம் நாயகி ராஷி கண்ணா.

சினிமா வாழ்க்கை தமக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் திகில், பேய் கதைகளை மையப்படுத்தி உருவாகும் திரைப்படங்களில் நடிக்க விரும்புவதாகவும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார். அடிதடிகள் நிறைந்த படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆசையும் உண்டு," என்கிறார் ராஷி கண்ணா.