மரியா: இந்தியாவுக்கு மனமார்ந்த நன்றி

மரியா: இந்தியாவுக்கு மனமார்ந்த நன்றி

2 mins read
c8deb0a8-d47e-49d5-b917-edc8022883bb
மரியா ரியாபோஷாப்கா -

அனு­தீப் இயக்­கத்­தில் சிவ­கார்த்­தி­கே­யன் நடித்­துள்ள 'பிரின்ஸ்' படம் திட்­ட­மிட்­ட­படி தீபா­வளி வேளை­யில் வெளி­யா­வது மகிழ்ச்சி அளிப்பதா­கப் படக்­கு­ழு­வி­னர் தெரி­வித்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில், இக்­குழு நேற்று முன்­தி­னம் செய்­தி­யா­ளர்­களைச் சந்­தித்­தது. அப்­போது பேசிய படத்­தின் நாய­கி­யும் உக்­ரேன் நடிகை யுமான மரியா ரியா­போ­ஷாப்கா இயக்கு­நர் அனு­தீப்­புக்­கும் சிவா­வுக்­கும் நன்றி தெரி­வித்­தார்.

"சிவ­கார்த்­தி­கே­யன் நல்ல நடி­கர். அவ­ரு­டன் பணி­யாற்­று­வது மிக­வும் எளி­மை­யாக இருந்­தது. ஒட்­டு­மொத்த படக்­கு­ழு­வும் என் மீது பாசம் காட்டி கவ­னித்­துக் கொண்­டது.

"குறிப்­பாக, நான் இந்­திய நாட்­டிற்கு நன்றி சொல்ல கட­மைப்­பட்­டுள்­ளேன். இது மிக­வும் அன்­பான நாடு. இந்­திய குடி­மக்­கள் எனக்கு நிறைய அன்­பைத் தந்­தி­ருக்­கி­றார்­கள். இத்­திரைப்­ப­டம் நல்ல படைப்­பாக உரு­வாகி உள்­ளது. மனக்­க­வ­லை­களை மறக்க வைக்­கும் ஜாலி­யான திரைப்­ப­டம் என­லாம்," என்­றார் மரியா. தாம் முழுப் படத்­தை­யும் பார்த்­து­விட்­ட­தாகக் குறிப்­பிட்ட அவர், தம்­மைப் போன்றே எல்­லோருக்­கும் இப்படம் பிடிக்­கும் எனக் கருது­வதா­க­வும் தெரி­வித்­தார்.

இந்­நி­கழ்ச்­சி­யில் பேசிய நடி­கர் சூரி, நாயகி மரி­யா­வைப் பற்றி பாராட்­டிப் பேசி­ய­து­டன், "நான் உங்­க­ளைக் காத­லிக்­கி­றேன்," என்று சொல்ல, அரங்­கம் சிரிப்­பொ­லி­யில் மூழ்­கி­யது.

இதற்­குப் பதி­ல­ளித்த மரியா, "நானும் உங்­களை நேசிக்­கி­றேன் சூரி அண்ணா," என்­றார். ஆனால் சூரி விடு­வ­தாக இல்லை.

"டார்­லிங்... நான் உன்­னைக் காதலிக்கிறேன்," என்று மீண்­டும் வற்­பு­றுத்த, மேடை­யில் அமர்ந்­தி­ருந்த சிவ­கார்த்­தி­கே­யன், மரியா காதில் ஏதோ கிசு­கி­சுத்­தார்.

அதன் பிறகு சூரியை நோக்கி, "சூரி சித்தப்பா," என்று மரியா குறிப்­பிட, அரங்கில் பலத்த கைத்­தட்­டல் எழுந்­தது.

இதை­ய­டுத்து சிவ­கார்த்­தி­கே­யனை அடிப்­பதுபோல் பாசாங்கு செய்த சூரி, "தம்பி சிவ­கார்த்­தி­கே­யனை வைத்­துக் கொண்டு என்­னால் எந்த இடத்­தி­லும் எதை­யும் செய்ய முடி­யாது," என்று நகைச்­சு­வை­யா­கக் குறிப்­பிட்­டார்.

பின்னர் பேசிய சிவ­கார்த்­தி­கே­யன், 'பிரின்ஸ்' படத்­தில் வன்­முறை, ஆபா­சம் ஏதும் இல்லை என்­றார். மேலும் இப்­படத்­தில் வில்­லன் என்று யாருமே இல்லை என்­றும் குறிப்­பிட்­டார்.

"பணம் கொடுத்து படம் பார்க்க வரும் மக்­களை இரண்­டரை மணி நேரம் மகிழ்ச்­சி­ப்ப­டுத்த வேண்டும் என்­பதை மட்­டுமே மன­திற்­கொண்டு இப்­ப­டத்தை உரு­வாக்கி இருக்­கி­றோம். இதை ஒரு புதிய முயற்சி என்­றும் சொல்­ல­லாம்.

"ஒரு வெளி­நாட்டுப் பெண்ணை தமிழ் பையன் காத­லிப்­ப­து­தான் கதை. நகைச்­சுவை என்­பது மிக­வும் கடி­ன­மான ஒன்று. அதை சவா­லாக ஏற்­றுக்­கொண்டு வேலை பார்த்­தோம். இது முழு நீள தமிழ்ப் படம்­தான். அதில் சந்­தே­கமே தேவை இல்லை.

"கதைப்படி நானும் மரியாவும் ஆசிரியர்களாக நடித்துள்ளோம். இன்றைய உலகச் சூழலில் மனிதாபிமானம்தான் முக்கியத் தேவையாக உள்ளது. அதை இந்தப் படம் வலியுறுத்துகிறது. இந்தப் படமும் வெளியீடு காணும் முன்பே லாபம் பெற்றுத் தந்துள்ளது," என்றார் சிவகார்த்திகேயன்.