தனுஷ்
, :
இதுவரை தனது சம்பளமாக மூன்று விரல்களைக் காட்டிப் பெற்று வந்த தனுஷ், இப்போது திடீரென நான்கு விரல்களைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
லாபத்தை வாரிச் சுருட்டாமல் படங்கள் பாதாளத்தில் விழுந்தாலும்கூட அதைப்பற்றி எல்லாம் அவர் அலட்டிக்கொள்வதில்லையாம்.
'கையில் காசு, வாயில் தோசை' எனும் விதமாக வெட்டு ஒன்று துண்டு இரண்டு எனப் பேசுகிறாராம். இதனால், தயாரிப்பாளர்கள் பாடு பெரும் திண்டாட்டமாகிப் போயுள்ளதாம்.
தனுஷ் நடிப்பில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றது.
அதைத்தொடர்ந்து அவரது நடிப்பில் வெளிவந்த 'நானே வருவேன்' திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கியது.
இதனால், வசூலும் எதிர்பார்த்த அளவு கிட்டவில்லை.
படத்தில் 'தனுஷின் நடிப்பு பரவாயில்லை, பாராட்டலாம்' என்று கூறும்படி இருந்தாலும் இப்படத்தை வெளியிட்ட நேரம் தவறாக அமைந்துவிட்டதாக கூறப்படுகிறது.
ஏனெனில், பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்திற்குப் போட்டியாக தனுஷின் 'நானே வருவேன்' களமிறங்கியது.
ஆனால், ரசிகர்களின் ஆதரவு பொன்னியின் செல்வனுக்குத்தான் அதிகம் கிடைத்தது.
இப்போதுவரை அந்தத் திரைப்படம் அரங்கு நிறைந்த பார்வையாளர்களுடன் திரையிடப்பட்டு வருகிறது.
ஆனால், 'நானே வருவேன்' படத்தோல்வியால் பிரம்மாண்டத் தயாரிப்பாளர் தாணு துவண்டு போய்விட்டதாகக் கூறப்படுகிறது.
மீண்டும் தனுஷை வைத்து ஒரு புதுப்படத்தைத் தயாரிக்கலாம் எனத் தான் எடுத்திருந்த முடிவையும் தாணு மாற்றிக்கொண்டு விட்டதாகத் தகவல்.
இந்த சூழலில், படத் தோல்வி பற்றி எல்லாம் தனுஷ் கவலைப்படாமல், அடுத்து தான் நடிக்கவுள்ள படத்திற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கி உள்ளார்.
இது ஒருபுறமிருக்க, தனுஷின் கறார் பேச்சாலும் தயாரிப்பாளர்கள் விழி பிதுங்கிப் போய் உள்ளனராம்.
ஏனெனில், இதுவரை ரூ. 30 கோடி சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த தனுஷ், இப்போது நான்கு விரல் களைக் காட்டி ரூ.40 கோடி வேண்டும் என்கிறாராம்.
இந்த ஆண்டில் அவரது நடிப்பில் வெளிவந்த படங்களில் 'திருச்சிற்றம்பலம்' படம் தான் லாபகரமாக ஓடியது. அதிலும், 'நானே வருவேன்' திரைப்படம் கொடுத்த அடியில் இருந்து தயாரிப்பாளர் இன்னும் மீளாமல் உள்ளார்.
அப்படி இருக்கும்போது, ஒரு நியாய மின்றி தனுஷ் கேட்கும் சம்பளத்தால் தயாரிப்பாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஆனாலும், அந்தச் சம்பளத்தில் இருந்து ஒரு ரூபாய் கூட குறைத்துக்கொள்ளமாட்டேன் என்று பிடிவாதமாகவும் தனுஷ் இருக்கிறாராம்.
இதுதான் கோலிவுட்டின் இப்போதைய புத்தம்புதுச் செய்தியாக பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

