மீண்டும் திரைப்படம் இயக்குகிறார் எஸ்.ஜே. சூர்யா

மீண்டும் திரைப்படம் இயக்குகிறார் எஸ்.ஜே. சூர்யா

1 mins read
37c82051-a45b-410b-99fa-d38cede99421
-

அஜித் நடித்த வாலி, விஜய்யின் குஷி ஆகிய வெற்றிப் படங்களை இயக்கி பிரபலமான எஸ்.ஜே.சூர்யா, பின்னர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். தற்போது அவருக்கு பல படங்களில் வில்லன் வேடங்கள் குவிகின்றன.

சமீபத்தில் வெளியான மாநாடு, டான் படங்களில் நடித்த எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் இவர் கைவசம் தற்போது 'பொம்மை', 'மார்க் ஆண்டனி' மற்றும் 'ஆர்சி 15' படங்கள் உள்ளன.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் எஸ்.ஜே.சூர்யா படம் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 'கில்லர்' என்ற பெயரில் உருவாகவுள்ள இப்படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்கி அதில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இவர் இயக்கத்தில் கடைசியாக 2015-ம் ஆண்டு இசை திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.