'பிரின்ஸ்' படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம்

'பிரின்ஸ்' படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம்

1 mins read
e95579f2-9815-4a91-a158-0fd08f26cabe
-

'டாக்­டர்', 'டான்' போன்ற வசூ­லில் சாத­னை படைத்த படங்­க­ளுக்­குப் பிறகு சிவ­கார்த்­தி­கே­யன் நடித்­தி­ருக்­கும் படம் 'பிரின்ஸ்'. தெலுங்கில் 'ஜாதி ரத்னாலு' என்ற வெற்றிப் படத்தை இயக்கிய அனுதீப் இந்தப் படத்தை இயக்கி இருக்­கி­றார். படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி­க­ளி­லும் தயா­ரிக்­கப்­பட்டு நேற்­றைய தினம் தீபா­வளி சிறப்­புப் பட­மாக உல­கெங்­கும் வெளி­யா­னது.

படத்­தின் கதா­நா­ய­கி­யாக உக்­ரேன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியா­போஷ்ப்கா நடித்­தி­ருக்­கி­றார்.

தந்­தை­யாக சத்­ய­ராஜ், வில்­லன் கதா­பாத்­தி­ரத்­தில் பிரேம்­ஜி­யும் சிறப்புத் தோற்­றத்­தில் சூரி­யும்

நடித்­துள்­ள­னர்.

நேற்று அதி­காலை 5 மணிக்கு முதல் காட்சி தொடங்­கிய நிலை­யில் சென்னை கோயம்­பேட்­டில் உள்ள திரை­ய­ரங்­கில் ரசி­கர்­க­ளு­டன் படம் பார்ப்­ப­தற்­காக தனது மனைவி ஆர்த்­தி­யு­டன் சிவ­கார்த்­தி­கே­யன் சென்­றி­ருந்­தார்.

அவ­ருக்கு ரசி­கர்­கள் படம் வெற்­றி­ய­டைய வாழ்த்­துக்­களைத் தெரி­வித்­த­னர். கொட்­டும் மழை­யில் சிவ­கார்த்­தி­கே­யன் தனது மனை­வி­யு­டன் திரை­ய­ரங்­கிற்­குச் சென்ற காணொளி இணை­யத்­த­ளங்­களில் பகி­ரப்­பட்டு வரு­கிறது.

சிவ­கார்த்­தி­கே­ய­னின் வழக்­க­மான நகைச்­சுவை இந்­தப் படத்­தில் அதி­கம் இருப்­ப­தா­க­வும் தீபா­வ­ளிக்கு குடும்­பத்­து­டன் சென்று பார்க்­கும் வகை­யி­லான ஒரு நல்ல படம் என்­றும் படம் பார்த்­த­வர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.