'இது சவாலான வேலை'

'இது சவாலான வேலை'

1 mins read
2cc04551-62a8-4168-8aa8-c831346879a7
குழந்தையுடன் காஜல் அகர்வால். -

ஒரு குழந்­தைக்குத் தாயாக இருப்­பது சவா­லான வேலை என்­கி­றார் நடிகை காஜல் அகர்­வால். கடந்த ஆறு மாதங்­க­ளுக்கு முன்பு ஆண் குழந்­தை­யைப் பெற்­றெ­டுத்த அவர், மீண்­டும் திரைப்­படங்­களில் நடிக்­கத் தொடங்கி உள்­ளார்.

இந்­நி­லை­யில், சமூக ஊட­கப் பதி­வில், தனது குழந்தை நீலின் புகைப்­ப­டத்தை வெளி­யிட்­ட­து­டன், கடந்த ஆறு மாதங்­கள் எப்­படி இவ்­வ­ளவு வேக­மா­கக் கடந்­து­போனது என்­பதே தெரி­ய­வில்லை எனக் குறிப்­பிட்­டுள்­ளார்.

"என் வாழ்க்­கை­யில் ஏற்­பட்ட மிக ஆழ­மான மாற்­றம் இது. தாயாக நான் மாறிய பிறகு நிறைய விஷ­யங்­க­ளைக் கற்­றுக்­கொண்­டேன். என்­னு­டைய வேலை­களை வழக்­கம்­போல் பார்த்­துக்கொண்டி­ருந்­தா­லும் ஒரு தாயாக சரி­யான நேரம், கவ­னிப்பு, அன்பு, உணவு போன்­ற­வற்றை மக­னுக்குச் சரியாக கொடுப்­பது சவா­லாக இருந்­தது. ஆனால், அவ­னுக்­குத் தேவை­யான எல்­லா­வற்­றை­யும் நான்­தான் செய்ய வேண்­டும் என்­ப­தில் தெளி­வாக இருந்­தேன்.

"இப்­போது நீ (மகன்) புரண்டு படுக்­கி­றாய், இட­மி­ருந்து வலம் நகர்­கி­றாய், என் மேல் ஏறு­கி­றாய்... இதெல்­லாம் ஏதோ ஓர் இர­வில் நடந்­த­தைப் போல இருக்­கிறது. உனக்கு நெற்­றி­யில் வந்த முதல் சிறு கட்டி, நீச்­சல் குளத்­தில் முதன்­மு­றை­யாக நீ குளித்­தது, உண­வு­களை ருசிக்க ஆரம்­பித்­தது என எல்­லாமே சீக்­கி­ர­மாக நடந்­து­விட்டது. இப்­ப­டியே போனால் நீ அடுத்த வாரத்­தில் கல்­லூ­ரிக்­குக் கூட போய்விடு­வாய் என நினைக்­கி­றேன். நீ என்னை அந்த அள விற்கு பொறுப்­புள்­ள­வ­ளாக மாற்றி இருக்­கி­றாய்," என்று காஜல் அகர்வால் தமது பதி­வில் தெரி­வித்துள்ளார்.