திரைத் துளி­கள்

திரைத் துளி­கள்

2 mins read
f63a7fa4-20c0-4100-b6a3-ed14444f58e9
-
multi-img1 of 3

 ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார் ஷ்ருதிஹாசன்.

டாப்னே ஷமோன் என்ற பெண் இயக்குநர் இயக்கும் 'தி ஐ' என்ற படத்தில் அவர் நடிக்க இருப்பதாகவும் இது முழுநீள திகில் கதை என்றும் கூறப்படுகிறது. இம்மாத இறுதியில் வெளிநாடு ஒன்றில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாம். இதையடுத்து திரையுலக நண்பர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 தாம் அண்மையில் நடித்த சில படங்கள் வசூல் அல்லது விமர்சன ரீதியில் சிக்கலை சந்தித்ததால் வருத்தத்தில் உள்ளாராம் பூஜா ஹெக்டே.

தமிழில் 'பீஸ்ட்', தெலுங்கில் 'ராதே ஷியாம்', 'ஆச்சார்யா' என பூஜா நடிப்பில் கடைசியாக வெளியான மூன்று படங்களின் வசூலும் தயாரிப்புத்தரப்புக்கு மனநிறைவு அளிக்கவில்லை. 'பீஸ்ட்' படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது எனில், இரு தெலுங்குப் படங்களின் வசூலும் தயாரிப் பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தின. இந்நிலையில், பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் உருவாகும் 'ஜனகண' என்ற படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டேவை ஒப்பந்தம் செய்து இருந்தனர். ஆனால் அந்தப் படத்தில் இருந்து பூஜாவை நீக்கிவிட்டதாகவும் அதன்

பின்னர் அந்தப் படமே கைவிடப்பட்டுள்ளதாகவும் இருவேறு தகவல்கள் உலா வருகின்றன.

 ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி உள்ள 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் ஜப்பானிய மொழியில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. ஜப்பானிய ரசிகர்கள் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். 'ஆர்ஆர்ஆர்' படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிக விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதற்கான உரிமம் 125 கோடி ரூபாய்க்கு விலை போயிருப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியானது. படத்தின் வெளியீட்டையொட்டி பல்வேறு விளம்பர நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதேபோல் பிரம்மாண்டமாக இல்லையென்றாலும், 'ஓடிடி' வெளியீட்டின்போது சிறிய விளம்பர நிகழ்வுகள் நடைபெற உள்ளதாகத் தகவல்.

 'வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பது பெரும் சவால் என்கிறார் கங்கனா ரணாவத்.

ஏற்கெனவே ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்தவர், இப்போது 'எமர்ஜென்சி' என்ற படத்தில் மறைந்த இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு களை ஏற்படுத்தி உள்ள நிலையில், அடுத்து வங்க மொழி நாடக நடிகையான பினோதினியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க உள்ளார் கங்கனா.

 அண்மையில் துபாய் சென்ற நடிகை நஸ்‌ரியா, அங்கு 'ஸ்கை டைவிங்' சாகச விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் சமூக ஊடகங்களில் பதிவிட, ரசிகர்கள் வாழ்த்து களைக் குவித்துள்ளனர். இந்த அனுபவம் மகிழ்ச்சியாகவும் தமது கனவு நனவாகும் வகையிலும் அமைந்ததாகவும் மேலும் பல சாகசங்களை செய்ய விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.