திரைத் துளி­கள்

திரைத் துளி­கள்

2 mins read
280f6ce6-0823-4c8b-acea-0bcf60e0c54a
-
multi-img1 of 2

புராணப் படங்களை இயக்குவதில் தெலுங்குத் திரையுலகம் முன்னணியில் இருந்து வருகிறது. இந்நிலையில் ராமாயணத்தை ராஜ மௌலியும் அல்லு அர்ஜூனும் தனித்தனியே எடுக்கப் போவதாக அறிவித்து இருந்தனர்.

தற்பொழுது ராஜமௌலி ராமாயணக் கதையை பிரபாஸை வைத்து 'ஆதி புருஷ்' என்ற பெயரில் இயக்கி உள்ளார். அதனால் ராமாயணம் கதையைப் படமாக்க நினைத்த அல்லு அர்ஜூன் கைவிட்டு விட்டதாக செய்திகள் வெளிவந்தன.

அதற்கு விளக்கம் அளித்த அல்லு அர்ஜூன், "நான் அறிவித்த ராமாயணம் படம் நின்றுவிடவில்லை, கைவிடப்படவும் இல்லை. ஒன்றரை ஆண்டாக தயாரிப்புக்கு முந்தைய பணிகள் நடந்து வருகின்றன. இன்னும் ஆறு மாதத்திற்குள் இந்தப் பணிகள் முடிவடைந்துவிடும். அடுத்த ஆண்டு ராமாயணம் படப்பிடிப்பு தொடங்கிவிடும்.

"இந்தப் படம் இந்தியாவிலேயே பெரிய படமாகவும் அதிக வரவு செலவில் எடுத்த படமாகவும் இருக்கும். ராமாயணம் படத்தை நாங்கள் எடுக்கப் போவதாக அறிவித்த நேரத்தில் வரவு செலவு ரூ.500 கோடியாக இருந்தது. இப்போது இந்த மதிப்பீடு இன்னும் அதிகமாகும். இரட்டிப்பு ஆனாலும் ஆச்சரியப்பட தேவையில்லை. ஆனால் படம் எடுப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பணிகள் நடைபெறுகின்றன," என்றார் அல்லு அர்ஜூன்.

ஐஸ்கீரீம் கடைக்காரர் கீர்த்தி சுரேஷிற்கு ஐஸ்கீரிம் கொடுப்பதுபோல அவரைத் தந்திரமாக ஏமாற்றும் காணொளி இணையத்தளங்களில் பரவி வருகிறது. அந்தக் காணொளியில் ஐஸ்கிரீமை எடுக்க முடியாமல் படாதபாடுபடும் கீர்த்தியின் அழகான காணொளிக்கு பலரும் விருப்பம் தெரிவித்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். கீர்த்தி சுரேஷ் தற்பொழுது 'தசரா', 'போலோ சங்கர்', 'மாமன்னன்', 'சைரன்' ஆகிய 4 படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

விஜய்யின் 67வது படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளி வருகின்றன.